விஜயை சாதாரணமாக எடை போட்டுவிட முடியாது: அண்ணாமலை | Annamalai | TVK Vijay |

தமிழ்நாட்டில் தற்போது இருக்கும் நான்கு முனைப் போட்டி விரைவில் இரு முனைப் போட்டியாக மாற வாய்ப்பிருக்கிறது...
விஜயை சாதாரணமாக எடை போட்டுவிட முடியாது: அண்ணாமலை
விஜயை சாதாரணமாக எடை போட்டுவிட முடியாது: அண்ணாமலைANI
1 min read

தமிழ்நாட்டில் வரும் ஜனவரி 23 பிரதமர் மோடி பிரசாரம் செய்யவுள்ளதாகக் கூறிய பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை, விஜயை சாதாரணமாக எடைபோட்டுவிட முடியாது என்றும் பேசினார்.

தமிழர் திருநாளான பொங்கலை மத்திய இணை அமைச்சர் எல். முருகன் தில்லியில் உள்ள அவரது இல்லத்தில் விமரிசையாகக் கொண்டாடி வருகிறார். அதன்படி இந்த ஆண்டு பொங்கல் விழாவில் பிரதமர் மோடி கலந்துகொண்டு பொங்கல் வைத்து வழிபட்டார். அந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு பாஜகவைச் சேர்ந்த பல முக்கிய தலைவர்கள் பங்கேற்றனர். இதற்கிடையில் பொங்கல் விழா முடிவடைந்த பிறகு நிகழ்ச்சியில் பங்கேற்ற தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஜனவரி 23 பிரதமர் மோடி பரப்புரை

“தமிழ்நாட்டில் பிரதமர் மோடியின் தேர்தல் பரப்புரை வரும் ஜனவரி 23 அன்று சென்னையில் தொடங்குகிறது. விஜய் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குள் வர வேண்டுமா வேண்டாமா என்று நான் எதுவும் நினைக்கவில்லை. அதை முடிவு செய்யத் தலைவர்கள் இருக்கிறார்கள். என்னைப் பொறுத்தளவில் ஒவ்வொரு கட்சிகளின் இலக்கு என்ன என்பதை முதலில் பார்க்க வேண்டும்.

விஜய் தெளிவுப்படுத்த வேண்டும்

சீமானைப் பொறுத்தவரை திராவிடக் கட்சிகளே வேண்டாம் என்பதை இலக்காக வைத்துக்கொண்டு பயணிக்கிறார். அதனால் அவர் எந்தக் கூட்டணிக்கும் வரப்போவதில்லை. விஜயைப் பொறுத்தவரை திமுக வேண்டாம் என்று சொல்லும் அவர் யார் வேண்டும் என்பதையும்தெளிவுபடுத்த வேண்டும். எங்களைப் பொறுத்தவரை வெவ்வேறு கொள்கை முரண்கள் இருந்தாலும் கூட அதிமுகவும் பாஜகவும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஒன்றாக இணைந்திருக்கிறோம். திமுகவை வீழ்த்த வேண்டும் என்பதே எங்கள் பொதுவான இலக்கு.

விஜயை சாதாரணமாக எடை போடக்கூடாது

விஜயை நான் சாதாரணமாக எடை போடவில்லை. அவர் அரசியலுக்கு வந்த முதல் நாளிலிருந்தே இதைச் சொல்கிறேன். மக்களின் ஆதரவு இருக்கும் தலைவர் அவர். தற்போது அவரது தமிழக வெற்றிக் கழகத்தில் செங்கோட்டையன் உட்பட பல தலைவர்கள் இணைந்திருக்கிறார்கள். அடிமட்ட அளவில் தொண்டர்கள் முனைப்போடு செயல்பட்டு வருகிறார்கள். அவரை லேசாக எடை போட்டுவிட்டக் கூடாது. அதேபோல்தான் சீமானையும் குறைத்து எடைபோட முடியாது.

தமிழ்நாட்டில் மும்முனைப்போட்டி என்று சொல்கிறார்கள். ஆனால் உண்மையில் நான்கு முனைப் போட்டி இருக்கிறது. அது வருங்காலத்தில் திமுக தலைமையிலான கூட்டணி, தமிழ்நாட்டில் உள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணி என்று இரண்டு முனைப் போட்டியாக மாறவும் வாய்ப்பிருக்கிறது” என்றார்.

Summary

Former BJP state president Annamalai, who said that Prime Minister Modi will campaign in Tamil Nadu on January 23, also said that Vijay cannot be underestimated.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in