தமிழிசையுடன் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை சந்திப்பு!

ஆந்திராவில் நடந்த சந்திரபாபு நாயுடுவின் பதவியேற்பு விழாவில் தமிழிசையை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கண்டிப்பது போலப் பேசியது சர்ச்சையானது
தமிழிசையுடன் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை சந்திப்பு!
@annamalai_k

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, முன்னாள் ஆளுநரும் பாஜக மூத்த தலைவர்களுள் ஒருவருமான தமிழிசை சௌந்தரராஜனை அவரது இல்லத்தில் சந்தித்துள்ளதாக தன் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

தமிழிசையை சந்தித்த பிறகு அண்ணாமலை வெளியிட்ட பதிவு பின்வருமாறு,

`இன்றைய தினம், மூத்த பாஜக தலைவர்களில் ஒருவரும், மாநிலத் தலைவராகத் திறம்படச் செயல்பட்டவருமான, அக்கா திருமதி தமிழிசை அவர்கள் இல்லத்திற்குச் சென்று நேரில் சந்தித்ததில் பெருமகிழ்ச்சி. தமிழகத்தில் தாமரை நிச்சயம் மலரும் என்பதை உறுதியுடன் கூறி, அதற்காகக் கடினமாக உழைத்த அக்கா திருமதி தமிழிசை அவர்கள் அரசியல் அனுபவமும், ஆலோசனைகளும், கட்சியின் வளர்ச்சிக்கான உத்வேகத்தைத் தொடர்ந்து அளித்துக் கொண்டிருக்கிறது’.

அண்ணாமலையின் பதிவை மேற்கோள் காட்டி, `தமிழக பாஜக மாநிலத்தலைவர் அன்புத் தம்பி திரு. அண்ணாமலை அவர்களை சந்தித்ததில் மகிழ்ச்சி’ எனத் தன் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார் தமிழிசை.

ஆந்திராவில் நடந்த சந்திரபாபு நாயுடுவின் பதவியேற்பு விழாவில் தமிழிசையை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கண்டிப்பது போலப் பேசியது சர்ச்சையான நிலையில், `அரசியல் பணிகளைத் தீவிரமாக மேற்கொள்ள எனக்கு அவர் அறிவுரை வழங்கினார்’ என அந்தச் சம்பவம் குறித்து விளக்கமளித்தார் தமிழிசை சௌந்திரராஜன்.

அதற்கும் முன்பு, `தமிழக பாஜகவில் சமூக விரோதிகளுக்குப் பதவிகள் வழங்கப்பட்டதில் தனக்கு வருத்தம் இருப்பதாக’ தனியார் தமிழ் செய்தி ஊடகம் ஒன்றுக்குத் தமிழிசை சௌந்தரராஜன் பேட்டியளித்திருந்தார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in