இலங்கைத் தூதரகம் முற்றுகைப் போர்: அன்புமணி ராமதாஸ் அறிவிப்பு

கடந்த ஜூன் 16-ல் மீன்பிடி தொடங்கிய பிறகு இன்று வரை 404 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கைத் தூதரகம் முற்றுகைப் போர்: அன்புமணி ராமதாஸ் அறிவிப்பு
1 min read

தமிழக மீனவர்கள் மீதான அடக்குமுறையைக் கண்டித்து  வரும் அக்.8-ல் பாமக சார்பில் இலங்கை தூதரகம் முற்றுகையிடப்படும் என அறிவித்துள்ளார் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்.

இது தொடர்பாக, இலங்கை தூதரகம் முற்றுகை போர் என்ற தலைப்பில் அன்புமணி ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை பின்வருமாறு:

`வங்கக்கடலில் மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களின் மீதான சிங்களக் கடற்படையினரின் அத்துமீறலும், அடக்குமுறைகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. பாரம்பரிய கடல் பகுதியில் தமிழக மீனவர்களின் மீன்பிடிக்கும் உரிமையை உறுதி செய்ய வேண்டும் என்று தமிழகம் வலியுறுத்தி வரும் போதிலும் அதை சிங்கள அரசு மதிக்க மறுப்பது கடுமையாக கண்டிக்கத்தக்கது.

வங்கக்கடலில் இரு படகுகளில் சென்று ஆழ்கடல் மீன்பிடிப்பில் ஈடுபட்டிருந்த தருவைக்குளம் மீனவர்கள் 22 பேர் கடந்த ஆகஸ்ட் 5-ல் கடல் நீரோட்டத்தின் காரணமாக இலங்கை கடல் எல்லைக்குள் அடித்துச் செல்லப்பட்டனர். அவர்களைக் கைது செய்து சிறையில் அடைத்த இலங்கைக் கடற்படை இரு மாதங்களுக்கு மேலாகியும் இன்னும் விடுதலை செய்யவில்லை.

மேலும், அனைத்து மீனவர்களுக்கும் தலா ரூ. 3.5கோடி அபராதம் விதித்த நீதிமன்றம், அதை செலுத்தாத வரை விடுவிக்க முடியாது என்று கூறிவிட்டது. அபராதத்தை செலுத்த முடியாத மீனவர்கள் இன்னும் சிறையில் வாடுகின்றனர். கடந்த ஜூன் 16-ல் மீன்பிடி தொடங்கிய பிறகு இன்று வரை 404 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்றைய நிலையில் மட்டும் இலங்கை சிறைகளில் 162 பேர் அடைக்கப்பட்டிருக்கின்றனர்.

இலங்கை சிறைகளில் அடைக்கப்பட்ட மீனவர்களால் அவர்களின் குடும்பத்தினர் மட்டுமின்றி, அவர்கள் பிடித்து வரும் மீன்களை சுத்தம் செய்தல், பதப்படுத்துதல், ஏற்றுமதி செய்தல் உள்ளிட்ட பணிகளை செய்யும் பத்து மடங்கு குடும்பத்தினரும் வாழ்வாதாரம் இழந்து தவிக்கின்றனர்.

எனவே, இலங்கை சிறைகளில் வாடும் 162 மீனவர்களையும் அவர்களின் படகுகளுடன் விடுதலை செய்ய வேண்டும் என்று இலங்கை அரசையும், அதற்கான நடவடிக்கைகளை எடுக்க மத்திய, மாநில அரசுகளையும் வலியுறுத்தி அக்டோபர் 8-ல் சென்னையில் பாமக சார்பில் இலங்கை துணைத்தூதரக முற்றுகைப் போராட்டம் நடைபெறவுள்ளது’ என்றார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in