பாஜகவுடன் கூட்டணி: அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவிப்பு

"எங்களுக்கு ஒதுக்கப்படவுள்ள குக்கர் சின்னத்தில் உறுதியாகப் போட்டியிடுவோம்."
டிடிவி தினகரன் (கோப்புப்படம்)
டிடிவி தினகரன் (கோப்புப்படம்)ANI
1 min read

மக்களவைத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைப்பதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு நிபந்தனையற்ற ஆதரவைத் தருவதாக டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தலில் கூட்டணி வைப்பது குறித்து பாஜக, அமமுக இடையே நீண்ட நாள்களாகப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வந்தன. இந்த நிலையில், கூட்டணி இன்று இறுதியானதாக டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.

திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது:

"பாஜகவுடன் பலமுறை பேசியிருக்கிறோம். இன்று அதிகாரபூர்வமாக இறுதி செய்தோம். கிஷன் ரெட்டி, மத்திய அமைச்சர் வி.கே. சிங் சென்னை வந்துள்ளார்கள். நான் திருச்சி வந்துள்ளதால், அவர்களைச் சந்திக்க முடியவில்லை. அதனால், தொலைபேசியில் அண்ணாமலை என்னைத் தொடர்பு கொண்டார். அவரிடத்தில் பேசி எங்களுடைய ஆதரவைத் தெரிவித்தேன்.

பாஜகவுடன் கூட்டணி வைப்பது குறித்து அமமுகவின் கோரிக்கைகளை ஏற்கெனவே கடிதத்தின் வாயிலாக அவர்களிடம் ஒப்படைத்துவிட்டோம். நரேந்திர மோடி பிரதமராவது உறுதி என்பது அனைவருக்கும் தெரியும். தமிழ்நாட்டிலும் அவர்களுக்கு சிறப்பான வெற்றியைப் பெற்று தருவதற்கு ஒரு அணிலைப் போல உதவிகரமாக இருப்போம்.

யார் பிரதமராக வேண்டும் என்பதுதான் நாடாளுமன்றத் தேர்தலின் நோக்கம். எனவே, பாஜக கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக நிபந்தனையற்ற ஆதரவைத் தரவிருக்கிறோம். எந்தெந்த தொகுதி, எத்தனை தொகுதிகள் என்பதும் பிரச்னை இல்லை. எங்களுடைய தேவை என்பதும் அவர்களுக்குத் தெரியும். அமமுக நியாயமான கோரிக்கையையே வைக்கும். சின்னம் உள்பட எவ்வித நிர்பந்தத்தையும் அவர்கள் கொடுக்கவில்லை. எங்களுக்கு ஒதுக்கப்படவுள்ள குக்கர் சின்னத்தில் உறுதியாகப் போட்டியிடுவோம்" என்றார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in