சென்னையில் குளிர்சாதன புறநகர் ரயில் சேவை தொடக்கம்: கட்டண விவரங்கள்

ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் இந்த ரயில்கள் இயக்கப்படாது.
சென்னையில் குளிர்சாதன புறநகர் ரயில் சேவை தொடக்கம்: கட்டண விவரங்கள்
1 min read

சென்னையில் குளிர்சாதன வசதியுடன் கூடிய புறநகர் ரயில் சேவை இன்று (ஏப்.19) தொடங்கப்பட்டுள்ளது.

சென்னை ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் குளிர்சாதன வசதியுடன் கூடிய புறநகர் ரயில்கள் இயக்கப்படும் என்று கடந்த நிதியாண்டில் அறிவிக்கப்பட்டது. இதன் அடிப்படையில், முதற்கட்டமாக தினமும் 6 சேவைகளை வழங்கும் 2 குளிர்சாதன புறநகர் ரயில்களின் இயக்கம் இன்று தொடங்கியுள்ளது.

தாம்பரம்-சென்னை கடற்கரை வழித்தடம்:

(49001) தாம்பரத்தில் இருந்து காலை 5.45 மணிக்குக் கிளம்பி, காலை 6.45 மணியளவில் சென்னை கடற்கரையை வந்தடையும்.

(49002) சென்னை கடற்கரையில் இருந்து இரவு 7.35 மணிக்குக் கிளம்பி, இரவு 8.30 மணியளவில் தாம்பரத்தை சென்றடையும்.

சென்னை கடற்கரை-செங்கல்பட்டு வழித்தடம்:

(49003) சென்னை கடற்கரையில் இருந்து காலை 7 மணிக்குக் கிளம்பி, காலை 8.35 மணியளவில் செங்கல்பட்டு ரயில் நிலையத்தைச் சென்றடையும்.

(49004) செங்கல்பட்டில் இருந்து காலை 9 மணிக்குக் கிளம்பி, காலை 10.30 மணியளவில் சென்னை கடற்கரையை வந்தடையும்.

(49005) சென்னை கடற்கரையில் இருந்து பிற்பகல் 3.45 மணிக்குக் கிளம்பி, மாலை 5.25 மணியளவில் செங்கல்பட்டு ரயில் நிலையத்தைச் சென்றடையும்.

(49006) செங்கல்பட்டில் இருந்து மாலை 5.45 மணிக்குக் கிளம்பி, இரவு 7.15 மணியளவில் சென்னை கடற்கரையை வந்தடையும்.

மேற்கூறிய வழித்தடத்தில் இருக்கும் அனைத்துப் புறநகர் ரயில் நிலையங்களிலும் ஒரு நிமிடம் ரயில்கள் நின்று செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் இவை இயக்கப்படாது என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குளிர்சாதன வசதி, தானியங்கிக் கதவுகள், சிசிடிவி கேமராக்கள், அவசர கால பொத்தான் போன்ற வசதிகளுடன் கூடிய 12 பெட்டிகளைக் கொண்ட ஒரு மின்சார ரயிலில் 1,116 பேர் அமர்ந்த நிலையிலும், 3,796 பேர் நின்ற நிலையிலும் பயணிக்கலாம் என்று கூறப்படுகிறது. 

மணிக்கு 110 கி.மீ. வேகத்தில் பயணிக்கும், இந்த குளிர்சாதன ரயில்களில் பயணிக்க, குறைந்தபட்ச கட்டணம் ரூ. 35 ஆகவும், அதிகபட்ச கட்டணம் ரூ. 105 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

விரிவான கட்டண விவரங்கள்:

சென்னை கோட்டை: ரூ. 35

எழும்பூர்: ரூ. 35

மாம்பலம்: ரூ. 40

கிண்டி: ரூ. 60

திரிசூலம்: ரூ. 60

தாம்பரம்: ரூ. 85

கூடுவாஞ்சேரி: ரூ. 90

சிங்கப்பெருமாள்கோயில்: ரூ. 100

செங்கல்பட்டு: ரூ. 105

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in