23 தொகுதிகளுக்கு முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட அதிமுக | TN Elections | AIADMK |

முன்னாள் அமைச்சர்கள் 21 பேருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கி அறிவிப்பு...
AIADMK releases first list of 23 candidates for Tamil Nadu Assembly polls 2026
23 தொகுதிகளுக்கு முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட அதிமுக
1 min read

எடப்பாடி உட்பட 23 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்து அதிமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 23 அன்று நடைபெறவுள்ளது. இதை முன்னிட்டு நேற்று (மார்ச் 24) அதிமுக தனது முழுமையான தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்தது. ஏற்கெனவே மூன்று கட்டங்களாக அதிமுக தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்திருந்த நிலையில், நேற்று மொத்தமாக 297 வாக்குறுதிகள் அடங்கிய தேர்தல் அறிக்கையை அதிமுக வெளியிட்டது. குறிப்பாக குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச பிரிட்ஜ், குடும்பத்திற்கு ரூ. 10,000, ஆண்டுக்கு 3 இலவச சமையல் எரிவாயு சிலிண்டர்கள் உள்ளிட்ட அறிவிப்புகள் அதில் இடம்பெற்றிருந்தன.

Attachment
PDF
அதிமுக தேர்தல் வாக்குறுதிகள் 2026
Preview

முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு

இதைத் தொடர்ந்து தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடவுள்ள முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. முன்னாள் முதலமைச்சரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமியின் எடப்பாடி உட்பட 23 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இதில், 21 பேர் முந்தைய அதிமுக ஆட்சியில் முன்னாள் அமைச்சர்களாக இருந்தவர்களுக்கு இம்முறை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

வேட்பாளர்கள் யார் யார்?

இது தொடர்பாக அதிமுக வெளியிட்டுள்ள அறிக்கையின்படி,

  1. எடப்பாடி (86) - எடப்பாடி கே. பழனிசாமி

  2. வேப்பனஹள்ளி (54) - கே.பி. முனுசாமி

  3. திண்டுக்கல் (132) - திண்டுக்கல் சீனிவாசன்

  4. நத்தம் (131) - நத்தம் விசுவநாதன்

  5. தொண்டாமுத்தூர் (119) - எஸ்.பி. வேலுமணி

  6. குமாரபாளையம் (97) - பி. தங்கமணி

  7. ராயபுரம் (17) - டி. ஜெயக்குமார்

  8. மைலம் (71) - சி.வி. சண்முகம்

  9. மதுரை மேற்கு (194) - செல்லூர் ராஜூ

  10. பாலக்கோடு (57) - கே.பி. அன்பழகன்

  11. நன்னிலம் (169) - ஆர். காமராஜ்

  12. வேதாரண்யம் (165) - ஓ.எஸ். மணியன்

  13. விராலிமலை (179) - சி. விஜயபாஸ்கர்

  14. கோவில்பட்டி (218) - கடம்பூர் ராஜூ

  15. திருமங்கலம் (196) - ஆர்.பி. உதயகுமார்

  16. சிவகாசி (205) - ராஜேந்திர பாலாஜி

  17. மதுரவாயல் (7) - பெஞ்சமின்

  18. கலசபாக்கம் (65) - அக்ரி கிருஷ்ணமூர்த்தி

  19. திருப்பரங்குன்றம் (195) - ராஜன் செல்லப்பா

  20. பவானி (104) - கே.சி. கருப்பணன்

  21. ஜோலார்பேட்டை (49) - கே.சி. வீரமணி

  22. கரூர் (135) - எம்.ஆர். விஜயபாஸ்கர்

  23. அரியலூர் (149) தாமரை எஸ். ராஜேந்திரன்.

தொகுதி மாறிய முன்னாள் அமைச்சர்கள்

கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த நிலையில் விழுப்புரம் தொகுதியிலிருந்து சி.வி. சண்முகம் மைலம் தொகுதிக்கும், ராஜேந்திர பாலாஜி ராஜபாளையத்திலிருந்து சிவகாசிக்கும், போளூர் தொகுதியிலிருந்து அக்ரி கிருஷ்ணமூர்த்தி கலசப்பாக்கம் தொகுதிக்கும் மாற்றப்பட்டுள்ளனர். முன்னாள் அமைச்சர் டி. ஜெயக்குமார், கடந்த 1991 முதல் ராயபுரம் தொகுதியில் போட்டியிடுகிறார். கடந்த 2021 தேர்தலில் அவர் தோல்வியடைந்தாலும் தொடர்ந்து 8-வது முறையாக அவருக்கு ராயபுரம் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.

Summary

AIADMK releases first list of 23 candidates for Tamil Nadu Assembly polls 2026

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in