ஈரோட்டில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் முன்னிலையில் அதிமுக நிர்வாகிகள் மோதல்!

அங்கிருந்த பிற நிர்வாகிகள் குற்றம்சாட்டிய நபரை நாற்காலிகளை கொண்டு தாக்கவே, அவர் கூட்டத்தில் இருந்து வெளியேறினார்.
ஈரோட்டில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் முன்னிலையில் அதிமுக நிர்வாகிகள் மோதல்!
1 min read

முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்ற அதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் நிர்வாகிகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டது.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கான ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக செயல்வீரர்கள் கூட்டம் இன்று (மார்ச் 5) காலை நடைபெற்றது. இதற்கு அதிமுக மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான கே.ஏ. செங்கோட்டையன் பங்கேற்று, கூட்டத்திற்கு தலைமை வகித்தார்.

பாவனிசாகர் எம்.எல்.ஏ. பண்ணாரி, மேட்டுப்பாளையம் எம்.எல்.ஏ. ஏ.கே. செல்வராஜ் மற்றும் திருப்பூர் முன்னாள் எம்.பி. சத்யபாமா ஆகியோரும் இந்த கூட்டத்தில் பங்கேற்றிருந்தார்கள். ஈரோடு மாவட்டத்தின் அந்தியூர், பவானிசாகர், கோபிசெட்டிபாளையம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த அதிமுக நிர்வாகிகள் இதில் கலந்துகொண்டார்கள்.

அப்போது, கூட்டத்தில் பங்கேற்றிருந்த நிர்வாகி ஒருவர் அந்நியர் பகுதி கட்சி நிர்வாகிகளுக்கு அதிமுக கூட்டங்கள் தொடர்பாக முறையாக அழைப்பு விடுக்கப்படுவதில்லை என்று குற்றச்சாட்டை முன்வைத்தார். இதைத் தொடர்ந்து அவர் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்து கேள்வி எழுப்பினார்.

இதை அடுத்து, அங்கிருந்த பிற நிர்வாகிகள் குற்றம்சாட்டிய நபரை தாக்கினார்கள். ஒரு கட்டத்தில் அவர் மீது நாற்காலிகளை கொண்டு பிறர் தாக்கவே, அந்நபர் கூட்டத்தில் இருந்து வெளியேறினார். இந்த விவகாரம் குறித்துப் பேசிய செங்கோட்டையன், புகார் தெரிவித்தவர் அதிமுகவைச் சேர்ந்தவர் இல்லை என்றும், கட்சியின் அனைத்து கூட்டங்களுக்கும் முறையாக அழைப்பு விடுக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in