அதிமுகவின் 2-வது கட்ட வேட்பாளர்கள் அறிவிப்பு

விளவங்கோடு சட்டப்பேரவைத் தேர்தலில் ராணி போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுகவின் 2-வது கட்ட வேட்பாளர்கள் அறிவிப்பு
ANI

மக்களவைத் தேர்தலுக்கான அதிமுகவின் 2-வது கட்ட வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை நேற்று எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். இதில் 16 வேட்பாளர்கள் இடம்பெற்றனர்.

மேலும், அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு ஐந்து தொகுதிகளும், எஸ்டிபிஐ மற்றும் புதிய தமிழகம் கட்சிக்குத் தலா ஒரு தொகுதியும் ஒதுக்கப்பட்டன.

எனவே கூட்டணிக் கட்சிகளுக்குக் கொடுத்தது போக மீதமுள்ள 33 தொகுதிகளில் அதிமுக போட்டியிடுகிறது.

இந்நிலையில் 2-வது கட்ட வேட்பாளர்கள் பட்டியல் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுகவின் 2-வது கட்ட வேட்பாளர்கள் பட்டியல்:

ஸ்ரீபெரும்புதூர் - பிரேம்குமார்

வேலூர்- பசுபதி

தருமபுரி - அசோகன்

திருவண்ணாமலை - கலியபெருமாள்

கள்ளக்குறிச்சி - குமரகுரு

திருப்பூர் - அருணாச்சலம்

நீலகிரி - லோகேஷ் தமிழ்ச்செல்வன்

கோவை - ராமச்சந்திரன்

பொள்ளாச்சி - கார்த்திகேயன்

திருச்சி - கருப்பையா

பெரம்பலூர் - சந்திரமோகன்

மயிலாடுதுறை - பாபு

சிவகங்கை - சேவியர் தாஸ்

தூத்துக்குடி - சிவசாமி வேலுமணி

திருநெல்வேலி - முத்துச்செல்வன்

கன்னியாகுமரி - பசிலியா நசரேத்

புதுச்சேரி - தமிழ்வேந்தன்

மேலும், விளவங்கோடு சட்டப்பேரவைத் தேர்தலில் ராணி போட்டியிடுவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in