அதிமுகவில் தேர்தல் குழுக்கள் அமைப்பு

கோப்புப்படம்
கோப்புப்படம்படம்: https://twitter.com/AIADMKOfficial
1 min read

நாடாளுமன்றத் தேர்தலுக்காக அதிமுக சார்பில் பணிகளை மேற்கொள்வதற்காக தொகுதிப் பங்கீட்டுக் குழு, தேர்தல் அறிக்கையைத் தயாரிக்கும் குழு, தேர்தல் பிரசாரக் குழு, தேர்தல் விளம்பரக் குழு ஆகிய குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த கே.பி. முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், பி. தங்கமணி, எஸ்.பி. வேலுமணி, பா. பென்ஜமின் ஆகியோர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது.

நத்தம் விசுவநாதன், சி. பொன்னையன், பொள்ளாச்சி ஜெயராமன், டி. ஜெயகுமார், சி.வி. சண்முகம், செம்மலை, பா. வளர்மதி, ஓ.எஸ். மணியன், ஆர்.பி. உதயகுமார், வைகைச்செல்வன் ஆகியோர் தேர்தல் அறிக்கையைத் தயாரிப்பதற்கான குழுவில் இடம்பெற்றுள்ளார்கள்.

தேர்தல் பிரசாரக் குழுவில் மு. தம்பிதுரை, கே.ஏ. செங்கோட்டையன், தளவாய்சுந்தரம், செல்லூர் ராஜூ, ப. தனபால், கே.பி. அன்பழகன், ஆர். காமராஜ், எஸ். கோகுல இந்திரா, உடுமை கே. ராதாகிருஷ்ணன், என்.ஆர். சிவபதி ஆகியோர் இடம்பெற்றுள்ளார்கள்.

தேர்தல் சம்பந்தமான விளம்பரப் பணிகளை மேற்கொள்ள சி. விஜயபாஸ்கர், கடம்பூர் ராஜூ, ராஜேந்திர பாலாஜி, அக்ரி எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தி, பி. வேணுகோபால், வி.பி.பி. பரமசிவம், ஐ.எஸ். இன்பதுரை, எஸ். அப்துல் ரஹீம், வி.வி.ஆர். ராஜ் சத்யன், வி.எம். ராஜலெட்சுமி ஆகியோர் தேர்தல் விளம்பரக் குழுவில் இடம்பெற்றுள்ளார்கள்.

திமுகவில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்கான குழுக்கள் ஜனவரி 19-ம் தேதி அமைக்கப்பட்டது.

logo
Kizhakku News
kizhakkunews.in