அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு
அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு @EPSTamilNadu

மக்களவைத் தேர்தல்: அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!

அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு ஐந்து இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
Published on

மக்களவைத் தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ளார்.

மக்களவைத் தேர்தலுக்கான தேதி மார்ச் 16 அன்று அறிவிக்கப்பட்டது. தமிழ்நாட்டில் ஏப்ரல் 19-ல் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

இந்நிலையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் வேட்பாளர்கள் பட்டியலை இன்று எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ளார். இதில் 16 வேட்பாளர்கள் இடம்பெற்றுள்ளனர்.

அதிமுக வேட்பாளர்கள் பட்டியல்:

தென் சென்னை- ஜெயவர்தன்

வடசென்னை - ராயபுரம் மனோ

காஞ்சிபுரம் (தனி) - ராஜசேகர்

அரக்கோணம் - விஜயன்

கிருஷ்ணகிரி - ஜெயபிரகாஷ்

ஆரணி - கஜேந்திரன்

விழுப்புரம் (தனி) - பாக்யராஜ்

சேலம் - விக்னேஷ்

நாமக்கல் - தமிழ்மணி

ஈரோடு-ஆற்றல் அசோக்குமார்

கரூர்-தங்கவேல்

சிதம்பரம் (தனி) - சந்திரஹாசன்

நாகப்பட்டினம் (தனி) - சுர்ஜித் சங்கர்

மதுரை - சரவணன்

தேனி- வி.டி. நாராயணசாமி

ராமநாதபுரம் - ஜெயபெருமாள்

இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி, “அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு ஐந்து இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், எஸ்டிபிஐ, புதிய தமிழகம் கட்சிக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. மக்களவைத் தேர்தல் அறிக்கையை விரைவில் எதிர்பார்க்கலாம்” என்றார்.

logo
Kizhakku News
kizhakkunews.in