அதிமுக தலைவர்களின் செல்ஃபோன் உரையாடல்கள் ஒட்டுக்கேட்பு: அதிமுக புகார்
ANI

அதிமுக தலைவர்களின் செல்ஃபோன் உரையாடல்கள் ஒட்டுக்கேட்பு: அதிமுக புகார்

அதிமுக தலைவர்களின் செல்ஃபோன்களை உளவுத் துறை சட்டவிரோதமாக ஒட்டுக்கேட்பதாக புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Published on

அதிமுக தலைவர்கள், தனி உதவியாளர்கள், ஓட்டுநர்கள் உள்ளிட்டோரது செல்ஃபோன் உரையாடல்கள் ஒட்டுக்கேட்கப்படுவதாக அதிமுக வழக்கறிஞர்கள் பிரிவு செயலாளர் இன்பதுரை தேர்தல் ஆணையத்திடம் புகாரளித்துள்ளார்.

இதுதொடர்புடைய புகார் மனுவில், அதிமுக தலைவர்கள், உதவியாளர்கள், வாகன ஓட்டுநர்களின் செல்ஃபோன்களை ஒட்டுக்கேட்பதற்காக உளவுத் துறை சார்பில் ரூ. 40 கோடி மதிப்புடைய மென்பொருளை வாங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், உளவுத் துறை சட்டவிரோதமாக அதிமுக தலைவர்களின் செல்ஃபோன்களை ஒட்டுக்கேட்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அதிமுக தலைவர்களின் செல்ஃபோன்களை ஒட்டுக்கேட்க வேண்டும் என உளவுத் துறை ஐஜி செந்தில்வேலன் உத்தரவிட்டுள்ளதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அதிமுக சார்பில் புகாரளிக்கப்பட்டுள்ளது.

logo
Kizhakku News
kizhakkunews.in