பாஜகவில் இணைந்தார் நடிகை கஸ்தூரி! | Kasthuri

சென்னை மாநகராட்சி வெளியே போராட்டம் நடத்தி வந்த தூய்மைப் பணியாளர்களுக்கு ஆதரவு தெரிவித்திருந்தார்.
பாஜகவில் இணைந்தார் நடிகை கஸ்தூரி! | Kasthuri
1 min read

பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் முன்னிலையில் நடிகை கஸ்தூரி தன்னை பாஜகவில் இணைத்துக் கொண்டார்.

ஆத்தா உன் கோயிலிலே படம் மூலம் திரைத் துறையில் கால் பதித்தார் நடிகை கஸ்தூரி. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் பல்வேறு படங்களில் நடித்துள்ளார். தமிழில் இவர் நடித்த சின்னவர், அமைதிப் படை, இந்தியன் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமடைந்தார்.

சினிமாவில் நடித்து வந்தாலும், கடந்த சில வருடங்களாகவே சமூகம் சார்ந்த கருத்துகளை வெளிப்படையாகத் தெரிவித்து வருகிறார். தொலைக்காட்சி விவாதங்களில் தன்னை ஈடுபடுத்தி வருகிறார். சமூக ஊடகங்களில் அரசியல் கருத்துகளை வெளிப்படையாகத் தெரிவித்து வருகிறார்.

குறிப்பாக, வலதுசாரி சிந்தாந்தத்திலிருந்து பேசும் கஸ்தூரி அவ்வப்போது சர்ச்சைகளிலும் சிக்கியதுண்டு. சென்னையில் கடந்தாண்டு ஹிந்து மக்கள் கட்சி சார்பில் அர்ஜுன் சம்பத் தலைமையில் பிராமணர்கள் பாதுகாப்புச் சட்டம் இயற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தெலுங்கு மக்கள் குறித்து மரியாதைக் குறைவாக கஸ்தூரி பேசியது சர்ச்சையானது.

இதுதொடர்பாக 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, ஹைதராபாதில் வைத்து கைது செய்யப்பட்டார். பிறகு, பிணையில் விடுவிக்கப்பட்டார்.

அண்மைக் காலமாக சமூக ஊடகங்களில் திமுக அரசுக்கு எதிரான கருத்துகளைப் பதிவிட்டும் பகிர்ந்தும் வருகிறார். சென்னை மாநகராட்சி வெளியே போராட்டம் நடத்தி வந்த தூய்மைப் பணியாளர்களுக்கு ஆதரவு தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், சென்னை தியாகராய நகரிலுள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் தன்னை பாஜகவில் இணைத்துக் கொண்டுள்ளார் நடிகை கஸ்தூரி. இதுதொடர்புடைய அறிவிப்பை நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். நடிகை கஸ்தூரி தவிர்த்து திருநங்கை நமிதா மாரிமுத்துவும் தன்னை பாஜகவில் இணைத்துக் கொண்டார்.

Actress Kasthuri | Kasthuri | TN BJP | Tamil Nadu BJP | Kasthuri Shankar | Nainar Nagenthiran | Namitha Marimuthu

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in