விரைவில் நாம் சந்திப்போம்: 10,12-ம் வகுப்பு மாணவர்களுக்கு விஜய் வாழ்த்து

கடந்த ஆண்டு 10,12-ம் வகுப்பு தேர்வுகளில், 234 தொகுதிகளில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவர்களுக்கு விஜய் பாராட்டுச் சான்றிதழ்களும், உதவித்தொகையும் வழங்கினார்.
விஜய்
விஜய் ANI

12 மற்றும் 10-ம் வகுப்புப் பொதுத் தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த பாராட்டுகள் என நடிகர் விஜய் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியாகின. சமீபத்தில் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகின. இந்நிலையில் தவெக தலைவரும் நடிகருமான விஜய் 10-ம் மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்புடைய அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது: “தமிழ்நாடு, புதுச்சேரியில் அண்மையில் நடைபெற்ற 12 மற்றும் 10-ம் வகுப்புப் பொதுத் தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த பாராட்டுகள். மற்றவர்கள் தன்னம்பிக்கையுடன் மீண்டும் முயன்று, வெற்றி பெற வாழ்த்துகள்.

அனைவரும் இனி தத்தம் உயர்கல்வி இலக்குகளுடன், வாழ்வின் பல்வேறு துறைசார்ந்த வெற்றிகளைக் குவித்து, வருங்காலச் சமூகத்தின் சாதனைச் சிற்பிகளாக வலம் வர இதயப்பூர்வமாக வாழ்த்துகிறேன். விரைவில் நாம் சந்திப்போம்”.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னதாக கடந்த வருடம் ஜூன் மாதம் 10,12-ம் வகுப்பு தேர்வுகளில் முதல் 3 இடங்களைப் பிடித்த 234 தொகுதியைச் சேர்ந்த மாணவர்களுக்கு நடிகர் விஜய் பாராட்டுச் சான்றிதழ்களும், உதவித்தொகையும் வழங்கினார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in