விஜய் கட்சியின் கொடி ஆகஸ்ட் 22-ல் அறிமுகம்?
விஜய் கட்சியின் கொடி ஆகஸ்ட் 22-ல் அறிமுகம்?ANI

விஜய் கட்சியின் கொடி ஆகஸ்ட் 22-ல் அறிமுகம்?

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கினார்.
Published on

தமிழக வெற்றிக் கழகம் கட்டிசியின் கொடி ஆகஸ்ட் 22 அன்று அறிமுகம் செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கினார்.

தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் இரண்டு கோடி உறுப்பினர்களை சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக விஜய் அறிவித்தார்.

அக்கட்சியின் முதல் அரசியல் மாநாட்டை நடத்த திட்டமிடப்பட்ட நிலையில், அதற்கான இடம் தேர்வு செய்யும் பணி தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் மாநாட்டுக்கு முன்னதாக கட்சியின் கொடியை அறிமுகம் செய்யவிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதனிடையே பனையூரில் உள்ள அவரது கட்சி அலுவலகத்தில் 40 அடி உயரத்தில் கொடிக் கம்பம் அமைக்கும் பணி நிறைவடைந்ததாகக் கூறப்படுகிறது.

மேலும், கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் வருகிற ஆகஸ்ட் 22 அன்று கட்சியின் கொடியை விஜய் அறிமுகம் செய்ய இருப்பதாகவும் கூறப்படுகிறது.

logo
Kizhakku News
kizhakkunews.in