நாம் தமிழர் கட்சியுடன் கூட்டணி?: தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் விளக்கம்

"விஜய்யின் பிறந்த நாளை தவெக நிர்வாகிகள் 365 நாளும் கொண்டாடுவார்கள்".
ஆனந்த்
ஆனந்த்@BussyAnand

விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்வோம் என தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பேசியுள்ளார்.

இன்று உலக பட்டினி தினத்தையொட்டி, சென்னை திருவான்மியூரில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மக்களுக்கு உணவு வழங்கப்பட்டது.

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், “விஜய்யின் பிறந்த நாளை தவெக நிர்வாகிகள் 365 நாளும் கொண்டாடுவார்கள். ஜூன் 22 அன்று பல்வேறு நலத்திட்டங்களை செய்வோம். கட்சித் தொடர்புடைய எந்த ஒரு நிகழ்ச்சியாக இருந்தாலும், எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் அது குறித்து விஜய் அறிவிப்பார்” என்றார்.

இதன் பிறகு, நாம் தமிழர் கட்சியுடன் கூட்டணியா என்ற கேள்வியைக் செய்தியாளர் ஒருவர் கேட்க, அதற்கும் “எதுவாக இருந்தாலும் விஜய் தான் முடிவு செய்வார்” என கூறினார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in