
நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா தன்னைத் திமுகவில் இணைத்துக்கொண்டார்.
இன்று (ஜன.19) காலை, சென்னை அண்ணா அறிவாலயத்தில் வைத்து தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலினை சந்தித்தார் நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா.
இந்த சந்திப்பு தொடர்பாக, திமுகவின் அதிகாரபூர்வ சமூக வலைதளக் கணக்கில் பதிவிட்டுள்ளவை,
`மாண்புமிகு முதலமைச்சர், கழகத் தலைவர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில், இன்று (19.1.2025) காலை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில், நடிகர் சத்யராஜின் மகளும், ஊட்டச்சத்து நிபுணருமான திவ்யா சத்யராஜ் தி.மு.க.வில் இணைந்தார்.
அப்போது, கழகப் பொருளாளர் டி.ஆர். பாலு எம்.பி., முதன்மைச் செயலாளரும் அமைச்சருமான கே.என். நேரு, சென்னை கிழக்கு மாவட்டச் செயலாளரும் அமைச்சருமான பி.கே. சேகர்பாபு ஆகியோர் உடனிருந்தனர்’.
திமுக, திராவிடர் கழகத்தின் ஆதரவாளராக நடிகர் சத்யராஜ் உள்ள நிலையில், அவரது மகள் திவ்யா திமுகவில் இணைந்துள்ளது பேசு பொருளாகியுள்ளது. ஊட்டச்சத்து நிபுணரான திவ்யா, அண்மைக் காலமாகத் தன் சமூகவலைதளக் கணக்கில் அரசியல் பதிவுகளைப் பதிவிட்டு வருகிறார்.