நடிகர் ரஜினிகாந்த் வாக்களித்தார்

நடிகர்கள் அஜித் குமார், சிவகார்த்திகேயன், பிரபு, கார்த்திக், தனுஷ் உள்ளிட்டோரும் வாக்களித்தார்கள்.
நடிகர் ரஜினிகாந்த் வாக்களித்தார்
படம்: https://twitter.com/ANI

தமிழ்நாட்டிலுள்ள 39 மக்களவைத் தொகுதிகள் உள்பட 21 மாநிலங்களில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. திரைப் பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்டோர் அடுத்தடுத்து வாக்குப்பதிவு செய்து வருகிறார்கள்.

நடிகர் ரஜினிகாந்த் சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.

நடிகர் அஜித் குமார் சென்னை திருவான்மியூரில் முதல் நபராக வந்து வாக்களித்துச் சென்றார். காலை 6.30 மணியளவில் வாக்குச்சாவடிக்கு வந்த அஜித் குமார் வரிசையில் நின்று 7 மணி வரை காத்திருந்து வாக்களித்துச் சென்றார்.

சென்னை வளசரவாக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் குடும்பத்தினருடன் வந்து வாக்களித்துச் சென்றார். நடிகர் பிரபு தனது குடும்பத்தினருடன் வந்து தியாகராய நகரில் வாக்களித்தார். நடிகர் தனுஷ் ஆழ்வார்பேட்டையில் வாக்களித்தார். நடிகர் கார்த்திக்கும் சென்னையில் தனது வாக்கைச் செலுத்தினார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in