வாழ்த்தியவர்களுக்கு நன்றி: விஜய் அறிக்கை

தமிழ்நாட்டு மக்களின் பேரன்போடு நான் முன்னெடுத்துள்ள அரசியல் பயணத்திற்கு..
வாழ்த்தியவர்களுக்கு நன்றி: விஜய் அறிக்கை
படம்: https://www.instagram.com/actorvijay/
1 min read

அரசியல் பயணத்தைத் தொடங்கியதற்கு நன்றி தெரிவித்த அனைவருக்கும் நடிகரும், தமிழக வெற்றி கழகம் கட்சித் தலைவருமான விஜய் நன்றி தெரிவித்துள்ளார்.

நடிகர் விஜய் கடந்த 2-ம் தேதி தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியைத் தொடங்கியிருப்பதாக அறிவிப்பை வெளியிட்டார். இவரது அரசியல் வருகைக்கு அரசியல் தலைவர்கள் முதல் திரைத் துறையினர் வரை அனைவரும் வாழ்த்துகளைத் தெரிவித்தார்கள்.

இந்த நிலையில் வாழ்த்து கூறிய அனைவருக்கும் விஜய் நன்றி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்புடைய அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது:

"தமிழ்நாட்டு மக்களின் பேரன்போடு நான் முன்னெடுத்துள்ள அரசியல் பயணத்திற்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்த பெருமதிப்புக்குரிய பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், அன்புக்குரிய திரைத்துறை நண்பர்கள், பாசத்துக்குரிய தமிழக தாய்மார்கள், சகோதர, சகோதரிகள், ஊக்கமளிக்கும் ஊடகவியலாளர்கள், "என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்கள்" அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகளுடன் பணிவான வணக்கங்கள்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in