
தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தலுக்கான இறுதி வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது தேர்தல் ஆணையம்.
மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டதையடுத்து தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 20 அன்று வேட்புமனுத் தாக்கல் தொடங்கியது. 27 அன்று வேட்புமனுத் தாக்கல் நிறைவடைந்தது. தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 அன்று மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது.
மொத்தமுள்ள 39 தொகுதிகளில் மொத்தமாக 950 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். அவர்களில் ஆண் வேட்பாளர்கள் - 874, பெண் வேட்பாளர்கள் - 76.
கரூரில் அதிகபட்சமாக 54 வேட்பாளர்களும் குறைந்தபட்சமாக நாகப்பட்டினத்தில் 9 வேட்பாளர்களும் போட்டியிடுகிறார்கள்.
தமிழ்நாடு மக்களவைத் தேர்தல்
தொகுதிகள் - 39
மொத்த வேட்பாளர்கள் - 950
ஆண் வேட்பாளர்கள் - 874
பெண் வேட்பாளர்கள் - 76
அதிகபட்ச வேட்பாளர்கள் - கரூர் (54)
குறைந்தபட்ச வேட்பாளர்கள் - நாகப்பட்டினம் (9)