செப்டம்பரில் மட்டும் 92.77 லட்சம் பயணிகள் பயணம்: சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம்

அதிகபட்சமாக செப்டம்பர் 6 அன்று 3.74 லட்சம் பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர்.
செப்டம்பரில் மட்டும் 92.77 லட்சம் பயணிகள் பயணம்: சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம்
1 min read

செப்டம்பரில் மட்டும் 92.77 லட்சம் பயணிகள் மெட்ரோ ரயில் சேவையைப் பயன்படுத்தியுள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளதாவது:

"நடப்பாண்டு ஜனவரியில் 84,63,384 பயணிகளும், பிப்ரவரியில் 86,15,008 பயணிகளும், மார்ச் மாதம் 86,82,457 பயணிகளும், ஏப்ரலில் 80,87,712 பயணிகளும், மே மாதம் 84,21,072 பயணிகளும், ஜூனில் 84,33,837 பயணிகளும், ஜூலையில் 95,35,019 பயணிகளும் மற்றும் ஆகஸ்டில் 95,43,625 பயணிகளும் மெட்ரோ ரரயில்களில் பயணம் செய்துள்ளனர்.

அதிகபட்சமாக 06.09.2024 அன்று 3,74,087 பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர்.

2024, ஆகஸ்டில் மட்டும் பயண அட்டைகளைப் பயன்படுத்தி 30,99,397 பயணிகள், டோக்கன்களை பயன்படுத்தி 7,319 பயணிகள், குழு பயணச்சீட்டு முறையை பயன்படுத்தி 7,149 பயணிகள், க்யுஆர் குறியீடு பயணச்சீட்டு முறையைப் பயன்படுத்தி 40,73,640 பயணிகள் மற்றும் சிங்கார சென்னை அட்டையை (தேசிய பொது இயக்க அட்டை) பயன்படுத்தி 20,90,192 பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர்.

சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் மெட்ரோ இரயில்களில் பயணிப்பவர்களுக்கு க்யுஆர் குறியீடு பயணச்சீட்டு, பயண அட்டைகள், வாட்ஸ்அப் டிக்கெட், பேடிஎம் செயலி மற்றும் ஃபோன்பே செயலி போன்ற அனைத்து வகையாக பயணச்சீட்டுகளுக்கும் 20% கட்டணத் தள்ளுபடி வழங்குகிறது. சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் வாட்ஸ்அப் பயணச்சீட்டை (+91 83000 86000) மூலமாக மற்றும் பேடிஎம் செயலி மூலமாகவும் பயணிகள் தங்கள் பயணச்சீட்டுகளைப் பெற்றுக் கொள்ளலாம்.

மெட்ரோ ரயில்கள் மற்றும் மெட்ரோ ரயில் நிலையங்களைப் பராமரிப்பதில் மிகுந்த ஒத்துழைப்பு நல்கிவரும் அனைத்துப் பயணிகளுக்கும் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகத்தின் சார்பில் மனமார்ந்த நன்றி" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in