இரவு 7 மணி நிலவரம்: தமிழ்நாட்டில் 72.09% வாக்குப்பதிவு

அதிகபட்சமாக கள்ளக்குறிச்சியில் 75.67% வாக்குகளும், குறைந்தபட்சமாக மத்திய சென்னையில் 67.35% வாக்குகளும் பதிவாகியுள்ளன.
இரவு 7 மணி நிலவரம்: தமிழ்நாட்டில் 72.09% வாக்குப்பதிவு

தமிழ்நாட்டில் இரவு 7 மணி நிலவரப்படி மொத்தம் 72.09% வாக்குகள் பதிவாகியுள்ளன.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்குத் தொடங்கி மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது. மாலை 6 மணிக்குள் வாக்குச் சாவடிக்கு வந்த வாக்காளர்களுக்கு டோக்கன் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் வாக்களித்து வருகிறார்கள்.

இந்த நிலையில், இரவு 7 மணி நிலவரப்படியில் 72.09% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.

அதிகபட்சமாக கள்ளக்குறிச்சியில் 75.67%, தருமபுரியில் 75.44%, சிதம்பரத்தில் 74.87% வாக்குகள் பதிவாகியுள்ளன. குறைந்தபட்சமாக மத்திய சென்னையில் 67.35%, தென் சென்னையில் 67.82%, மதுரையில் 68.98%, வட சென்னையில் 69.26% வாக்குகள் பதிவாகியுள்ளன.

2019 மக்களவைத் தேர்தலைக் காட்டிலும் கூடுதல் வாக்குகள் பதிவாகியுள்ளதாக சத்யபிரதா சாஹூ தெரிவித்தார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in