தமிழ்நாட்டில் 69.72% வாக்குகள் பதிவு: தேர்தல் ஆணையம்

அதிகபட்சமாக தருமபுரியில் 81.2% வாக்குகள் பதிவாகியுள்ளன.
தமிழ்நாட்டில் 69.72% வாக்குகள் பதிவு: தேர்தல் ஆணையம்

தமிழ்நாட்டில் 69.72% வாக்குகள் பதிவாகியுள்ளதாக இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டிலுள்ள 39 மக்களவைத் தொகுதிகளுக்கும் ஒரேகட்டமாக ஏப்ரல் 19-ல் வாக்குப்பதிவு நடைபெற்றது. காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது.

ஏப்ரல் 19 இரவு 7 மணி நிலவரப்படி தமிழ்நாட்டில் 72.09% வாக்குகள் பதிவானதாக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்தார். இதைத் தொடர்ந்து, நள்ளிரவு 12 மணியளவில் தலைமைத் தேர்தல் ஆணையம் ஒரு தரவை வெளியிட்டது. இதன்படி, தமிழ்நாட்டில் மொத்தம் 69.46% வாக்குகள் பதிவானதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.

வாக்குப்பதிவு நிறைவடைந்து இரு நாள்கள் ஆன நிலையில், தமிழ்நாட்டில் மொத்தம் பதிவான வாக்குகள் குறித்த அதிகாரப்பூர்வ தரவுகளை இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

இதன்படி, தமிழ்நாட்டில் மொத்தம் 69.72% வாக்குகள் பதிவாகியுள்ளன. அதிகபட்சமாக தருமபுரியில் 81.2% வாக்குகள் பதிவாகியுள்ளன.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in