வாக்குப்பதிவு விகிதத்தில் மாற்றம்: தமிழ்நாட்டில் 69.46% வாக்குப்பதிவு

நேற்றிரவு 7 மணி நிலவரப்படி தமிழ்நாட்டில் 72.09% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்தார்.
வாக்குப்பதிவு விகிதத்தில் மாற்றம்: தமிழ்நாட்டில் 69.46% வாக்குப்பதிவு
ANI

மக்களவைத் தேர்தலில் நள்ளிரவு 12 மணி நிலவரப்படி தமிழ்நாட்டில் 69.46% வாக்குகள் பதிவாகியுள்ளன.

தமிழ்நாட்டிலுள்ள 39 மக்களவைத் தொகுதிகள் உள்பட 21 மாநிலங்களில் 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது. நேற்றிரவு 7 மணி நிலவரப்படி தமிழ்நாட்டில் 72.09% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து நள்ளிரவு 12 மணியளவில் தில்லியிலுள்ள தலைமைத் தேர்தல் ஆணையம் வெளியிட்ட தரவுகளின்படி தமிழ்நாட்டில் மொத்தம் 69.46% வாக்குகளே பதிவாகியுள்ளன.

தமிழ்நாட்டு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ வெளியிட்ட தரவுகளைக் காட்டிலும் குறைவான வாக்குகளே பதிவாகியுள்ளதாகத் தலைமைத் தேர்தல் ஆணையம் வெளியிட்ட தரவுகள் தெரிவித்தன.

  1. திருவள்ளூர் - 68.31%

  2. வட சென்னை - 60.13%

  3. தென் சென்னை - 54.27

  4. மத்திய சென்னை - 53.91%

  5. ஸ்ரீபெரும்புதூர் - 60.21%

  6. காஞ்சிபுரம் - 71.55%

  7. அரக்கோணம் - 74.08%

  8. வேலூர் - 73.42%

  9. கிருஷ்ணகிரி - 71.31%

  10. தருமபுரி - 81.48%

  11. திருவண்ணாமலை - 73.88%

  12. ஆரணி - 75.65%

  13. விழுப்புரம் - 76.47%

  14. கள்ளக்குறிச்சி - 79.25%

  15. சேலம் - 78.13%

  16. நாமக்கல் - 78.16%

  17. ஈரோடு - 70.54%

  18. திருப்பூர் - 70.58%

  19. நீலகிரி - 70.93%

  20. கோவை - 64.81%

  21. பொள்ளாச்சி - 70.70%

  22. திண்டுக்கல் - 70.99%

  23. கரூர் - 78.61%

  24. திருச்சி - 67.45%

  25. பெரம்பலூர் - 77.37%

  26. கடலூர் - 72.28%

  27. சிதம்பரம் - 75.32%

  28. மயிலாடுதுறை - 70.06%

  29. நாகப்பட்டினம் - 71.55%

  30. தஞ்சாவூர் - 68.18%

  31. சிவகங்கை - 63.94%

  32. மதுரை - 61.92%

  33. தேனி - 69.87%

  34. விருதுநகர் - 70.17%

  35. ராமநாதபுரம் - 68.18%

  36. தூத்துக்குடி - 59.96%

  37. தென்காசி - 67.55%

  38. திருநெல்வேலி - 64.10%

  39. கன்னியாகுமரி - 65.46%

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in