ஏற்காட்டில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 6 பேர் உயிரிழப்பு

1-வது கொண்டை ஊசி மலைப்பாதையில் பேருந்து கட்டுப்பாட்டை இழந்ததாகத் தெரிகிறது.
ஏற்காட்டில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 6 பேர் உயிரிழப்பு
படம்: airnews_Chennai

ஏற்காடு மலைப்பாதையில் தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளார்கள்.

சேலம் மாவட்டம் ஏற்காட்டிலிருந்து தனியார் பேருந்து சேலம் நோக்கி வந்துகொண்டிருந்தது. 11-வது கொண்டை ஊசி மலைப்பாதையில் பேருந்து கட்டுப்பாட்டை இழந்ததாகத் தெரிகிறது. அந்த இடத்தில் திரும்பும்போது பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதில் சம்பவ இடத்திலேயே ஒரு சிறுவன் உள்பட 5 பேர் உயிரிழந்துள்ளார்கள். மேலும் ஒருவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.

விபத்தில் 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ள நிலையில், அவர்கள் விபத்துப் பகுதியிலிருந்து மீட்கப்பட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு வருகிறார்கள்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in