
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே, மாடு மேய்த்துக் கொண்டிருந்த பெண்கள் மீது கார் மோதிய விபத்தில் 5 பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்கள்.
மாடு மேய்த்துக்கொண்டு சாலையோரத்தில் அமர்ந்திருந்தபோது, கார் மோதியதாகவும் கூறப்படுகிறது. சாலையைக் கடக்கும்போது கார் மோதியதாகவும் கூறப்படுகிறது.
விபத்தில் உயிரிழந்தவர்கள் அனைவரும் பண்டிதமேடு பகுதியைச் சேர்ந்தவர்கள். விபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து, உயிரிழந்தவர்களின் உறவினர்கள், காரை ஓட்டி வந்த ஓட்டுநரைக் கடுமையாகத் தாக்கினார்கள்.
திருப்போரூர் காவல் துறையினர் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். விசாரணையின் முடிவில் விபத்துக்கான காரணம் குறித்தும் விபத்து நேர்ந்தது எப்படி என்பதும் தெரியவரும்.