ஓபிஎஸ் பெயரில் 5 பேர் வேட்புமனு: ராமநாதபுரத்தில் குழப்பம்!

ராமநாதபுரத்தில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை ஓ. பன்னீர்செல்வம் நேற்று தாக்கல் செய்தார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்ANI

ராமநாதபுரம் மக்களவைத் தேர்தலில் ஓ. பன்னீர்செல்வம் பெயரில் 5 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் ராமநாதபுரத்தில் பாஜக கூட்டணி சார்பில் சுயேச்சையாகப் போட்டியிடுகிறார். இதற்கான வேட்புமனுவை அவர் நேற்று தாக்கல் செய்தார்.

வாளி, பலாப்பழம், திராட்சை ஆகிய சின்னங்களைத் தனக்கு ஒதுக்குமாறு தேர்தல் ஆணையத்திடம் கேட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இந்த நிலையில், ஓ. பன்னீர்செல்வம் போட்டியிடும் அதே ராமநாதபுரத்தில் ஓ. பன்னீர்செல்வம் என்ற பெயரிலேயே இதுவரை 5 வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்கள். இதனால், ஓ. பன்னீர்செல்வத்துக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதே தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் நவாஸ் கனி, அதிமுக சார்பில் ஜெயபெருமாள் ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.

தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19 அன்று ஒரேகட்டமாக நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் நாளையுடன் நிறைவடைகிறது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in