வீட்டிலிருந்து 360 கிலோ வெடிபொருள் பறிமுதல்: ஹரியாணாவில் மருத்துவர் கைது! | Haryana |

ஜம்மு-காஷ்மீரில் நடத்திய விசாரணயின் அடிப்படையில் கிடைத்த தகவல்களின் மூலம், ஹரியாணாவில் சோதனை நடத்தப்பட்டுள்ளது.
Haryana: 360 kg IED-explosive material recovered in Faridabad, 2 held
காவல் ஆணையர் சதேந்தர் குமார் குப்தா
1 min read

ஹரியாணா மாநிலம் ஃபரிதாபாதில் மருத்துவரின் வீட்டிலிருந்து 360 கிலோ அளவுக்கு வெடிபொருள்கள் மற்றும் ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ஜம்மு-காஷ்மீர், ஃபரிதாபாத் காவல் துறை மற்றும் உளவுத் துறை சார்பில் ஞாயிறன்று சோதனை நடத்தப்பட்டது. ஜம்மு-காஷ்மீரில் சந்தேகிக்கப்படும் சிலரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் கிடைத்தத் தகவலின் பெயரில் இந்தச் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

ஃபரிதாபாதில் உள்ள அல் ஃபலா மருத்துவக் கல்லூரியில் பேராசிரியராகவும் எம்பிபிஎஸ் மருத்துவராகவும் உள்ளார் முஸாமில் ஷகில். இவருடைய வாடகை வீட்டிலிருந்து வெடிபொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. இவர் ஜம்மு-காஷ்மீரைச் சேர்ந்தவர் என்று தகவல் வெளியாகியுள்ளன.

சுமார் 360 கிலோ அளவுக்கு வெடிபொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகக் காவல் துறை ஆணையர் சதேந்தர் குமார் குப்தா தெரிவித்துள்ளார். மருத்துவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். ஸ்ரீநகரில் ஜெய்ஷ்-ஏ-முஹமது பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவாக போஸ்டர்களை உருவாக்கிய விவகாரத்தில் இவர் ஏற்கெனவே தேடப்பட்டு வந்ததாகவும் சொல்லப்படுகிறது.

பறிமுதல் செய்யப்பட்ட வெடிபொருள்கள் 360 கிலோ எடை கொண்ட அமோனியம் நைட்ரேட் என்று காவல் துறை தெரிவித்துள்ளது. மேலும் ஒரு கேரம் காக் ரைஃபிள், 84 கார்ட்ரிஜஸ், இரு ஆட்டோமடிக் பிஸ்டல், 5 லிட்டர் ரசாயனம் உள்ளிட்டவையும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகக் காவல் துறை தெரிவித்துள்ளது.

Summary

As the Jammu and Kashmir Police recovered IED-making material and ammunition from Haryana's Faridabad on Monday, Commissioner of Police Satender Kumar Gupta detailed the joint operation involving the J&K Police and Haryana Police.

Jammu & Kashmir | Haryana | Haryana Police | Explosives |

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in