ராமேஸ்வரம் மீனவர்கள் 24 பேரை விடுதலை செய்த இலங்கை நீதிமன்றம்

25 பேரில் ஒருவருக்கு மட்டும் 6 மாதம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ராமேஸ்வரம் மீனவர்கள் 24 பேரை விடுதலை செய்த இலங்கை நீதிமன்றம்
ANI
1 min read

கடந்த மார்ச் 21 அன்று இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 24 பேரை இலங்கை நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.

இந்திய எல்லையைத் தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கைக் கடற்படையால் தமிழ்நாட்டின் மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவதும், மீண்டும் அவர்கள் விடுதலை செய்யப்படுவதும் அவ்வப்போது நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 25 மீனவர்களை மார்ச் 21 அன்று, மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது எல்லை தாண்டியதாகக் கூறி இலங்கைக் கடற்படை கைது செய்தது. மேலும் அவர்களிடம் இருந்து 3 விசைப் படகுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

சிறை பிடிக்கப்பட்ட மீனவர்கள் 25 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இந்நிலையில் இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்பட்ட 25 பேரில் 24 பேரை விடுதலை செய்து இலங்கை நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. 25 பேரில் ஒருவருக்கு மட்டும் 6 மாதம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பறிமுதல் செய்யப்பட்ட 3 விசைப் படகுகளில் இருவர் படகுகளுக்கு உரிமையாளராக இருந்ததால் விடுதலை செய்யப்பட்டனர். மற்றொருவர் படகின் உரிமையாளராக இல்லாத காரணத்தால் இது தொடர்பான வழக்கு அடுத்த மாதம் நடைபெறும் எனவும் படகை இயக்கி வந்த அந்த நபருக்கு 6 மாதம் சிறைத் தண்டனை விதித்தும் இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

logo
Kizhakku News
kizhakkunews.in