திமுக போட்டியிடும் 21 தொகுதிகள் எவை?

காங்கிரஸ் போட்டியிடும் 10 தொகுதிகள் என்ன என்பது இன்று இறுதியானது.
திமுக போட்டியிடும் 21 தொகுதிகள் எவை?
திமுக போட்டியிடும் 21 தொகுதிகள் எவை?ANI

மக்களவைத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு முழுமையாக நிறைவடைந்ததன் மூலம், திமுக போட்டியிடும் 21 தொகுதிகள் இறுதியாகியுள்ளன.

மக்களவைத் தேர்தலில் கூட்டணி அமைப்பது குறித்து திமுக, காங்கிரஸ் இடையிலான தொகுதிப் பங்கீடு கடந்த மார்ச் 9-ல் கையெழுத்தானது. திமுக கூட்டணியில் புதுச்சேரி உட்பட 10 தொகுதிகள் ஒதுக்கப்படும் என தீர்மானிக்கப்பட்டது.

இந்நிலையில், காங்கிரஸ் போட்டியிடும் 10 தொகுதிகள் என்ன என்பது இன்று இறுதியானது. மேலும், மதிமுக போட்டியிடும் தொகுதியும் அறிவிக்கப்படாமல் இருந்த நிலையில், தற்போது அந்தக் கட்சிக்கு திருச்சி மக்களவைத் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம், திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு முழுவதுமாக நிறைவடைந்துவிட்டது.

எனவே மொத்தம் உள்ள 40 தொகுதிகளில், திமுக தங்களின் கூட்டணி கட்சிகளுக்கு 19 தொகுதிகளை ஒதுக்கிய நிலையில் மீதமுள்ள 21 தொகுதிகளில் நேரடியாக போட்டியிடுகிறது.

திமுக கூட்டணி விவரம்:

திமுக - 21 தொகுதிகள்

(தென் சென்னை, மத்திய சென்னை, வட சென்னை, ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம், வேலூர், அரக்கோணம், திருவண்ணாமலை, ஆரணி, கள்ளக்குறிச்சி, தருமபுரி, சேலம், ஈரோடு, கோவை, தூத்துக்குடி, தென்காசி, தேனி, நீலகிரி, பொள்ளாச்சி, தஞ்சாவூர், பெரம்பலூர்)

காங்கிரஸ் - 10 தொகுதிகள் (திருவள்ளூர் (தனி), கடலூர், மயிலாடுதுறை, சிவகங்கை, திருநெல்வேலி, கிருஷ்ணகிரி, கரூர், விருதுநகர், கன்னியாகுமரி, புதுச்சேரி)

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் - 2 தொகுதிகள் (மதுரை, திண்டுக்கல்)

இந்திய கம்யூனிஸ்ட் - 2 தொகுதிகள் (திருப்பூர், நாகப்பட்டினம்)

விடுதலைச் சிறுத்தைகள் - 2 தொகுதிகள் (சிதம்பரம், விழுப்புரம்)

மதிமுக - 1 தொகுதி (திருச்சி)

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் - 1 தொகுதி (ராமநாதபுரம்)

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி - 1 தொகுதி (நாமக்கல்)

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in