வரும் 2025-ம் ஆண்டுக்கான பொதுவிடுமுறை நாட்களை அறிவித்துள்ளார் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் ந. முருகானந்தம்.
2025-ம் ஆண்டின் அனைத்து சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகள் தமிழக அரசு விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. இதைத் தவிர்த்து மொத்தம் 24 நாட்கள் பொது விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. அவை பின்வருமாறு,
ஜனவரி (1, 14, 15, 16 மற்றும் 26),
பிப்ரவரி (11),
மார்ச் (30 மற்றும் 31),
ஏப்ரல் (1, 10, 14 மற்றும் 18),
மே (1),
ஜூன் (7),
ஜூலை (6),
ஆகஸ்ட் (15, 16 மற்றும் 27),
செப்டம்பர் (5),
அக்டோபர் (1, 2 மற்றும் 20),
டிசம்பர் (25).
தமிழக அரசின் அறிவிப்புப்படி நவம்பர் மாதத்தில் மட்டும் ஒரு பொது விடுமுறையும் இல்லை. அத்துடன் விஜயதசமி மற்றும் காந்தி ஜெயந்தி என இரு பொதுவிடுமுறை நாட்களும் ஒரே நாளில் (அக்.2) வருகின்றன.
மேலும் குடியரசு தினம், தெலுங்கு வருடப் பிறப்பு, மொஹரம் என 3 பொதுவிடுமுறை நாட்கள் ஞாயிற்றுக்கிழமையிலும், பக்ரீத், கிருஷ்ண ஜெயந்தி என 2 பொதுவிடுமுறை நாட்கள் சனிக்கிழமையிலும் வருகின்றன.