பாஜக கூட்டணி: அமமுகவுக்கு இரண்டு தொகுதிகள் ஒதுக்கீடு

ஜான் பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்துக்கு ஒரு தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
பாஜக கூட்டணியில் அமமுகவுக்கு இரண்டு தொகுதிகள் ஒதுக்கீடு
பாஜக கூட்டணியில் அமமுகவுக்கு இரண்டு தொகுதிகள் ஒதுக்கீடு

பாஜக கூட்டணியில் அமமுகவுக்கு இரண்டு தொகுதிகளும், தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்துக்கு ஒரு தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளன.

மக்களவைத் தேர்தலுக்கான தேதி மார்ச் 16 அன்று அறிவிக்கப்பட்டது. தமிழ்நாட்டில் ஏப்ரல் 19-ல் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

தமிழ்நாட்டில் பாஜக கூட்டணியில் பாமக, ஓபிஎஸ் அணி, டிடிவி தினகரனின் அமமுக, தமிழ் மாநில காங்கிரஸ், புதிய நீதிக் கட்சி, பாரிவேந்தரின் இந்திய ஜனநாயகக் கட்சி, ஜான் பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் ஆகியவை இடம் பெற்றுள்ளன.

பாஜக கூட்டணியில் பாமகவுக்கு 10 மக்களவைத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.

இந்நிலையில் தமிழ்நாட்டில் பாஜக கூட்டணியில் இணைந்துள்ள டிடிவி தினகரன் தலைமையிலான அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்துக்கு இரண்டு தொகுதிகளும், ஜான் பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்துக்கு ஒரு தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளன.

சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில், இதுதொடர்புடைய ஒப்பந்தத்தில் அண்ணாமலை மற்றும் டிடிவி தினகரன் கையெழுத்திட்டனர்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in