சிராவயல் மஞ்சுவிரட்டு: மாடு முட்டி இருவர் உயிரிழப்பு

கடந்தாண்டு ஒருவர் உயிரிழந்தார், 120 பேர் காயமடைந்தார்கள்..
கோப்புப்படம்
கோப்புப்படம்ANI
1 min read

சிவகங்கையில் புகழ்பெற்ற சிறாவயல் மஞ்சுவிரட்டுப் போட்டியில் மாடு முட்டியதில் சிறுவன் உள்பட இருவர் உயிரிழந்துள்ளார்கள்.

மதுரையில் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையையொட்டி ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெறுவதைப்போல சிவகங்கை மாவட்டம் சிராவயல் கிராமத்தில் மஞ்சுவிரட்டுப் போட்டி நடைபெறும். இந்தப் போட்டி தை 3 நடைபெறும். இந்தப் போட்டியில் 272 காளைகள், 81 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றார்கள்.

இதன்படி, தை 3-ம் நாளான இன்று சிராவயலில் மஞ்சுவிரட்டுப் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியை கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரியகருப்பன் கொடியசைத்துத் தொடக்கி வைத்தார். இந்தப் போட்டியில் கோவில் காளைகளை அவிழ்த்துவிட்ட பிறகு மற்ற காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன.

போட்டியின்போது பாஸ்கரன் என்கிற 12 வயது சிறுவன் மற்றும் அடையாளம் கண்டறியப்படாத இளைஞர் ஒருவர் மாடு முட்டி உயிரிழந்துள்ளார்கள்.

கடந்தாண்டு நடைபெற்ற சிராவயல் மஞ்சுவிரட்டுப் போட்டியில் ஒருவர் உயிரிழந்தார், 120 பேர் காயமடைந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

logo
Kizhakku News
kizhakkunews.in