எஸ்ஐஆர்-க்கு பின்: தொகுதி வாரியாக சென்னை நிலவரம் என்ன? | SIR | Chennai |

எஸ்ஐஆர்-க்கு பின் சென்னையில் மொத்தம் 14.25 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளார்கள்.
14.25 Lakh voters removed in Voters Draft List in Chennai
கோப்புப்படம்ANI
1 min read

சென்னையில் சிறப்பு தீவிர திருத்தத்துக்குப் பிறகு மொத்தம் 14.25 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளார்கள். அதாவது, சுமார் 35 சதவீத வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளார்கள்.

தமிழ்நாட்டில் நவம்பர் 4 முதல் டிசம்பர் 4 வரை சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டது. தமிழ்நாட்டில் இரு முறை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு டிசம்பர் 14 அன்று இப்பணிகள் முடிவடைந்தன. இதன் முடிவில் மாவட்டம் வாரியாக முதலில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. பிறகு, சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக், மாநிலம் முழுக்க எஸ்ஐஆர் பணிகள் மூலம் நீக்கப்பட்ட வாக்காளர்கள் எண்ணிக்கை விவரத்தை வெளியிட்டார்.

தமிழ்நாட்டில் எஸ்ஐஆர்-க்கு முன் 6.41 கோடி வாக்காளர்கள் இருந்தார்கள். எஸ்ஐஆர்-க்கு பின் 5.43 கோடி வாக்காளர்கள் வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளார்கள். மொத்தம் 97.37 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளார்கள்.

சென்னையில் மொத்தம் 16 சட்டப்பேரவைத் தொகுதிகள். தொகுதி வாரியாக நீக்கப்பட்ட வாக்காளர்கள் எண்ணிக்கையின் தரவுகள் வெளியாகியுள்ளன. மேலும், எஸ்ஐஆர்-க்கு பிறகு மீதமுள்ள வாக்காளர்கள் எண்ணிக்கையின் விவரமும் வெளியாகியுள்ளது.

எஸ்ஐஆரில் நீக்கப்பட்டவர்கள் மற்றும் எஸ்ஐஆருக்கு பிந்தைய நிலை

Special Intensive Revision | SIR | Election Commission | Chennai | Chennai SIR |

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in