நாளை வெளியாகிறது பிளஸ்-2 தேர்வு முடிவுகள்

தமிழ்நாட்டில் பிளஸ் 2 பொதுத்தேர்வை சுமார் 7.5 லட்சம் மாணவர்கள் எழுதினர்.
கோப்புப் படம்
கோப்புப் படம்

பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் நாளை காலை 9.30 மணிக்கு வெளியாகவுள்ளது.

தமிழ்நாட்டில் பிளஸ் 2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் 1 அன்று தொடங்கி மார்ச் 22 வரை நடைபெற்றது. இந்த தேர்வை சுமார் 7.5 லட்சம் மாணவர்கள் எழுதினர்.

விடைத்தாள்களைத் திருத்தும் பணி கடந்த ஏப்ரல் 2 அன்று தொடங்கி 13 வரை நடைபெற்ற நிலையில் நாளை முடிவுகள் வெளியாகவுள்ளது.

தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in, www.dge.tn.gov.in உள்ளிட்ட இணையதளங்களில் மாணவர்கள் அறிந்து கொள்ளலாம். மேலும், மாணவர்கள் அவர்கள் பள்ளிகளில் கொடுத்திருந்த தொலைபேசி எண்ணுக்கு மதிப்பெண் விவரங்கள் வழக்கம்போல அனுப்பி வைக்கப்பட உள்ளன.

தனித்தேர்வர்களுக்கு தாங்கள் பதிவுசெய்த தொலைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி வழியாக முடிவுகள் அனுப்பி வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in