10-ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு முடிவுகள் மே 10 அன்று காலை 9:30 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 26 அன்று தொடங்கி ஏப்ரல் 8 வரை நடைபெற்றது. இந்த தேர்வை சுமார் 9 லட்சம் மாணவர்கள் எழுதினர்.
இதன் விடைத்தாள் திருத்தும் பணிகள் முடிந்த நிலையில் நாளை மறுநாள் முடிவுகள் வெளியாகவுள்ளது.
தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in, www.dge.tn.gov.in, https://results.digilocker.gov.in/ உள்ளிட்ட இணையதளங்களில் மாணவர்கள் அறிந்து கொள்ளலாம்.
மேலும், மாணவர்கள் அவர்கள் பள்ளிகளில் கொடுத்திருந்த தொலைபேசி எண்ணுக்கு மதிப்பெண் விவரங்கள் வழக்கம்போல அனுப்பி வைக்கப்பட உள்ளன.
தனித்தேர்வர்களுக்கு தாங்கள் பதிவுசெய்த தொலைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி வழியாக முடிவுகள் அனுப்பி வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.