
10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று (மே 16) வெளியிட்டார்.
கடந்த கல்வியாண்டின் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு, கடந்த மார்ச் 28 தொடங்கி ஏப்ரல் 15 தேதி வரை நடைபெற்றது. இத்தேர்வை மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 4,113 தேர்வு மையங்களில் 8,71,239 பேர் எழுதினார்கள். இதில் தனித்தேர்வர்களும், சிறைக் கைதிகளும் அடக்கம்.
இந்நிலையில், பொதுத்தேர்வு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. tnresults.nic.in, dge.tn.gov.in மற்றும் results.digilocker.gov.in ஆகிய இணையதளங்களில் தேர்வு முடிவுகளை தெரிந்துகொள்ளலாம்.
மாணவர்கள் தேர்ச்சி விவரம்:
10-ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதிய மாணவர்களில், ஒட்டுமொத்தமாக 93.80% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதாவது, 8,71,239 பேரில், 8,17,261 பேர் தேர்ச்சி பெற்றனர்.
பொதுத்தேர்வை எழுதிய 95.88% (4,17,183) பெண் மாணவர்களும், 91.74% ஆண் மாணவர்களும் (4,00,078) தேர்ச்சி பெற்றுள்ளனர்.
நூற்றுக்கு நூறு மதிப்பெண் எடுத்த மாணவர்கள்:
தமிழ்: 8
ஆங்கிலம்: 346
கணிதம்: 1,996
சமூக அறிவியல்: 10,256
அறிவியல்: 10,838
பள்ளிகளின் தேர்ச்சி விவரம்:
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வெழுதிய மொத்த பள்ளிகள்: 12,485
100% தேர்ச்சி பெற்ற பள்ளிகள்: 4,917
100% தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளிகள்: 1,867
தேர்ச்சி விகிதத்தில் முதல் 5 இடங்களைப் பெற்ற மாவட்டங்கள்:
சிவகங்கை (98.31%)
விருதுநகர் (97.45%)
தூத்துக்குடி (96.76%)
கன்னியாகுமரி (96.66%)
திருச்சி (96.61%)