கோப்புப் படம்
கோப்புப் படம்ANI

பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகள்: 91.17% தேர்ச்சி

அதிகபட்சமாக கணினி அறிவியலில் 3432 மாணவர்கள் 100-க்கு 100 மதிப்பெண்களை எடுத்துள்ளனர்.
Published on

தமிழ்நாட்டில் மார்ச் 4 முதல் 25 வரை நடைபெற்ற பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியாகின.

இதில் 91.17 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளார்கள்.

தமிழ்நாட்டில் பிளஸ் 1 பொதுத்தேர்வை சுமார் 7.4 லட்சம் மாணவர்கள் எழுதினர்.

தேர்வெழுதிய பெண் மாணவர்களில் 94.69 சதவீதத்தினர் தேர்ச்சி பெற்றுள்ளார்கள். ஆண் மாணவர்களைவிட 7.43 சதவீதம் கூடுதலாக பெண் மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளார்கள்.

தேர்வெழுதியவர்களில் 87.26 சதவீத ஆண் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளார்கள்.

அரசுப் பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 85.75 சதவீதமாகவும், அரசு உதவி பெறும் பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 92.36 சதவீதமாகவும், தனியார் சுயநிதிப் பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 98.09 சதவீதமாகவும் உள்ளன.

அதிகபட்சமாக கணினி அறிவியலில் 3432 மாணவர்கள் 100-க்கு 100 மதிப்பெண்களை எடுத்துள்ளனர்.

logo
Kizhakku News
kizhakkunews.in