பாமக வேட்பாளர்கள் அறிவிப்பு: கடலூரில் தங்கர் பச்சான் போட்டி

பாமக செய்தித் தொடர்பாளர் பாலு அரக்கோணத்தில் போட்டியிடுகிறார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்ANI

மக்களவைத் தேர்தலுக்கான வேட்பாளர்கள் பட்டியலை பாமக வெளியிட்டுள்ளது.

மக்களவைத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிடுவதாக விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் மார்ச் 18-ல் நடைபெற்ற பாமகவின் உயர்நிலைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. பாஜக கூட்டணியில் 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் எல். முருகன் உள்ளிட்டோர் மார்ச் 19-ல் தைலாபுரம் சென்று கூட்டணியை உறுதி செய்தார்கள். பாமக போட்டியிடும் தொகுதிகள் பின்னர் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து, நேற்று மாலை கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகளை தமிழ்நாடு பாஜக வெளியிட்டது. காஞ்சிபுரம், அரக்கோணம், தருமபுரி, ஆரணி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், திண்டுக்கல், மயிலாடுதுறை, கடலூர் ஆகிய 10 தொகுதிகள் பாமகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.

இதில் காஞ்சிபுரம் தவிர்த்து மீதமுள்ள 9 தொகுதிகளுக்கு பாமக வேட்பாளர்களை அறிவித்துள்ளது.

பாமக வேட்பாளர்கள் பட்டியல்:

  • திண்டுக்கல் - திலகபாமா, மாநிலப் பொருளாளர்

  • அரக்கோணம் - கே. பாலு, செய்தித் தொடர்பாளர்

  • ஆரணி - கணேஷ் குமார், மாவட்டச் செயலாளர் (திருவண்ணாமலை கிழக்கு)

  • கடலூர் - தங்கர் பச்சான், எழுத்தாளர், திரைப்பட இயக்குனர்

  • மயிலாடுதுறை - ம.க. ஸ்டாலின், மாவட்டச் செயலாளர் (தஞ்சாவூர் வடக்கு)

  • கள்ளக்குறிச்சி - தேவதாஸ் உடையார், மாநில துணைத் தலைவர்

  • தருமபுரி - அரசாங்கம், மாவட்டச் செயலாளர் (தருமபுரி கிழக்கு)

  • சேலம் - அண்ணாதுரை, முன்னாள் மாவட்டச் செயலாளர் (சேலம் தெற்கு)

  • விழுப்புரம் - முரளி சங்கர், மாணவர் அணி மாநிலச் செயலாளர்

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in