கோயிலில் தன்னிடம் சாதி கேட்ட அதிகாரி குறித்து நடிகை நமிதா புகார் அளித்த நிலையில், அது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்வதற்காக நமிதா அவருடைய கணவருடன் சென்றிருக்கிறார்.
கோயிலில் இருந்த அதிகாரி ஒருவர் நமிதாவிடம் நீங்கள் எந்த மதத்தைச் சேர்ந்தவர், நீங்கள் எந்த சாதியைச் சேர்ந்தவர் போன்ற கேள்விகளை எழுப்பியதாகக் கூறி அந்த அதிகாரி மீது குற்றம்சாட்டினார்.
இந்நிலையில் இது குறித்து மீனாட்சி அம்மன் கோயில் சார்பாக, “முக்கியமான பிரபலங்கள், வெளிநாட்டினர் வரும் போது அவர்கள் ஹிந்து மதமா என விசாரிப்பது வழக்கமான நடைமுறை தான். ஹிந்துக்கள் அல்லாதோருக்கு கோயிலுக்குள் அனுமதி கிடையாது என அறிவிப்புப் பலகை உள்ளது. எனவே, கோயில் பணியில் இருந்த பொறுப்பு அதிகாரி நமிதாவிடம் அவ்வாறு கேட்டுள்ளார். அதற்கான விளக்கத்தை அளித்தவுடன் நமிதாவுக்கு உரிய மரியாதையுடன் சாமி தரிசனம் செய்து அனுப்பி வைத்தோம்” என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.