தவெக கொடியின் விளக்கத்தையும் வரலாற்றையும் மாநாட்டில் அறிவிக்கிறேன் என்று விஜய் கூறியுள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை இன்று அறிமுகம் செய்துள்ளார் அக்கட்சியின் தலைவர் விஜய்.
இதைத் தொடர்ந்து பேசிய அவர், “இன்று நம் அனைவருக்கும் ஒரு சந்தோஷமான நாள். கடந்த பிப்ரவரியில் கட்சியின் பெயரை நான் அறிவித்தேன். அன்று முதல் அனைவரும் நம் கட்சியின் முதல் மாநாட்டுக்காக காத்துக் கொண்டிருக்கிறீர்கள்.
அதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது. விரைவில் அது குறித்த அறிவிப்பு வெளியாகும்.
முன்னதாக நீங்கள் அனைவரும் கொண்டாடும் வகையில் கட்சியின் கொடியை அறிமுகம் செய்துள்ளேன்.
இதுவரை நம்முடைய வெற்றிக்காக உழைத்தோம். இனி தமிழ்நாட்டின் உயர்வுக்காக உழைப்போம். தவெக கொடியின் விளக்கத்தையும் வரலாற்றையும் மாநாட்டில் அறிவிக்கிறேன்” என்றார்.