தவெகவின் முதல் மாநாட்டுக்கு அனுமதி கிடைக்குமா?: விழுப்புரம் ஆட்சியர் பதில்

தவெக தலைவர் விஜய் கடந்த ஆகஸ்ட் 22 அன்று கட்சிக் கொடியை அறிமுகம் செய்தார்.
தவெகவின் முதல் மாநாட்டுக்கு அனுமதி கிடைக்குமா?: விழுப்புரம் ஆட்சியர் பதில்
1 min read

தவெகவின் முதல் மாநாட்டுக்கு அனுமதி வழங்குவது குறித்து காவல்துறை கண்கானிப்பாளர் முடிவு எடுப்பார் என்று விழுப்புரம் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

தவெக தலைவர் விஜய் கடந்த ஆகஸ்ட் 22 அன்று கட்சிக் கொடியை அறிமுகம் செய்து வைத்து, கொடிப் பாடலையும் வெளியிட்டார்.

இதைத் தொடர்ந்து விஜய்யின் கட்சிக் கொடி மீது விமர்சனங்கள் எழுந்தன.

முன்னதாக தவெக கொடியின் விளக்கத்தையும் வரலாற்றையும் மாநாட்டில் அறிவிக்கிறேன் என்று விஜய் தெரிவித்திருந்தார்.

எனவே, தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு எப்போது நடைபெறும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்தது. இதைத் தொடர்ந்து தவெகவின் முதல் மாநாடு செப்டம்பர் 23-ல் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியான நிலையில், இது தொடர்பாக விழுப்புரம் விக்கிரவாண்டியில் மாநாட்டை நடத்த அனுமதி கோரி அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மனு அளித்திருந்தார்.

இந்நிலையில் தவெகவின் முதல் மாநாட்டுக்கு அனுமதி வழங்குவது குறித்து காவல்துறை கண்கானிப்பாளர் முடிவு எடுப்பார் என்று விழுப்புரம் ஆட்சியர் பழனி தெரிவித்துள்ளார். மேலும், மாநாடு நடைபெறும் இடத்தில் போக்குவரத்து, பாதுகாப்பு அம்சங்கள் குறித்து ஆய்வு செய்த பிறகு முடிவு செய்யப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in