தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு செப்டம்பர் 23-ல் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தவெக தலைவர் விஜய் கடந்த 22 அன்று கட்சிக் கொடியை அறிமுகம் செய்து வைத்து, கொடிப் பாடலையும் வெளியிட்டார்.
இதைத் தொடர்ந்து விஜய்யின் கட்சிக் கொடி மீது விமர்சனங்கள் எழுந்தன.
முன்னதாக தவெக கொடியின் விளக்கத்தையும் வரலாற்றையும் மாநாட்டில் அறிவிக்கிறேன் என்று விஜய் தெரிவித்திருந்தார்.
எனவே, தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு எப்போது நடைபெறும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில் தவெகவின் முதல் மாநாடு செப்டம்பர் 23-ல் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இது தொடர்பாக விழுப்புரம் விக்கிரவாண்டியில் தவெகவின் முதல் மாநாட்டிற்கு அனுமதி கோரி அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் விழுப்புரம் காவல் துறையினரிடம் மனு அளித்துள்ளார்.