ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக இயக்குநர் நெல்சனின் மனைவி மோனிஷாவிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பகுஜன் சமாஜ் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை 5-ல் சென்னையில் வெட்டிக் கொல்லப்பட்டார்.
இதுதொடர்பாக இதுவரை 23 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். இவர்களில் திருவேங்கடம் என்பவர் ஜூலை 14-ல் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார்.
இந்த வழக்கில் கடந்தாண்டு படுகொலை செய்யப்பட்ட ஆற்காடு சுரேஷின் மனைவி பொற்கொடி செம்பியம் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார். ஆந்திரத்தில் தலைமறைவாக இருந்ததை அறிந்து, அங்கு வைத்து கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக இயக்குநர் நெல்சனின் மனைவி மோனிஷாவிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
காவல் துறை விசாரணையில் இந்த வழக்கில் தேடப்பட்டு வரும் சம்போ செந்திலின் கூட்டாளியான மொட்டை கிருஷ்ணனுடன் மோனிஷா செல்போனில் பேசியது தெரியவந்துள்ளது.
எனவே, காவல் துறையினரால் தேடப்பட்டு வரும் ரவுடிகளுக்கு அடைக்கலம் கொடுத்தாரா? என்ற சந்தேகத்தின் அடிப்படையில் மோனிஷாவிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
இது தொடர்பாக இயக்குநர் நெல்சனிடமும் விசாரணை மேற்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.