காஞ்சி சங்கர மடத்தின் இளைய மடாதிபதி தேர்வு

இவர் ரிக் வேதத்தில் அறிஞர்.
காஞ்சி சங்கர மடத்தின் இளைய மடாதிபதி தேர்வு
1 min read

காஞ்சிபுரம் சங்கர மடத்தின் இளைய மடாதிபதியாக துத்து சத்ய வேங்கட சூர்ய சுப்ரமண்ய தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

கணேஷ சர்மா டிராவிட் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர்.

காஞ்சிபுரம் சங்கர மடத்தின் மடாதிபதியாக இருந்து வந்த ஜயேந்திர சரஸ்வதி கடந்த 2018-ல் காலமானார். சங்கர மடத்தின் இளைய மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி 2018-க்கு பிறகு மடத்தின் 70-வது மடாதிபதியாக இருந்து வருகிறார். இவர் மடாதிபதியான பிறகு, இளைய மடாதிபதி தேர்வு செய்யப்படாமல் இருந்தது.

இந்நிலையில், சங்கர மடத்தின் இளைய மடாதிபதியாக ஆந்திரத்தைச் சேர்ந்த கணேஷ சர்மா டிராவிட் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஏப்ரல் 30-ல் அக்‌ஷய திருதி நாளன்று விஜயேந்திர சரஸ்வதி இவரை ஆசிர்வதிக்கிறார்.

இளைய மடாதிபதியாகப் பொறுப்பேற்கவுள்ள கணேஷ சர்மா டிராவிட் 2006-ல் வேதங்கள் சார்ந்த படிப்பைத் தொடங்கியுள்ளார். இவர் ரிக் வேதத்தில் அறிஞர். ரிக் வேதத்துடன் யஜுர்வேதம், சாமவேதம் உள்ளிட்டவற்றையும் பயின்றுள்ளார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in