சித்ரா பௌர்ணமி கிரிவலம்: திருவண்ணாமலை செல்வோர் கவனத்திற்கு!

சித்ரா பௌர்ணமி (மே 12) அன்று விஐபி தரிசனம் ரத்து செய்யப்படும்.
சித்ரா பௌர்ணமி கிரிவலம்: திருவண்ணாமலை செல்வோர் கவனத்திற்கு!
1 min read

சித்ரா பௌர்ணமியை ஒட்டி, கிரிவலம் தொடர்பான முக்கிய அறிவிப்பை திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோயில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் நிகழும் பௌர்ணமி, சித்ரா பௌர்ணமி என்று அழைக்கப்படும். மிகவும் சிறப்பு வாய்ந்த நாளான கருதப்படும் சித்ரா பௌர்ணமி அன்று, கிரிவலம் மேற்கொள்வது பிரசித்திபெற்ற நிகழ்வாகும்.

இந்நிலையில், சித்ரா பௌர்ணமி அன்று திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலை ஒட்டி அமைந்துள்ள மகாதீப மலையைச் சுற்றி பக்தர்கள் கிரிவலம் செல்வதற்கான உகந்த நேரத்தை அருணாசலேஸ்வரர் திருக்கோயில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

இதன்படி, மே 11 அன்று இரவு 8.47 மணிக்குத் தொடங்கும் சித்ரா பௌர்ணமி, மே 12 அன்று இரவு 10.43 மணிக்கு நிறைவடையும் என்று கோயில் நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.

மேலும், சித்ரா பௌர்ணமியை ஒட்டி திருவண்ணாமலைக்குத் திரளான பக்தர்கள் வருகை தரவுள்ளதால், கோயிலைச் சுற்றி மேற்கொள்ளப்பட்டுவரும் முன்னேற்பாடுகளை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் பார்வையிட்டார்.

இதைத் தொடர்ந்து, சித்ரா பௌர்ணமி (மே 12) அன்று அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் விஐபி தரிசனம் ரத்து செய்யப்படும் என்று அவர் அறிவித்தார்.

logo
Kizhakku News
kizhakkunews.in