பூடானுக்கு அதிகம், மங்கோலியாவுக்குக் குறைவு: நட்பு நாடுகளுக்கு பட்ஜெட்டில் எவ்வளவு ஒதுக்கீடு?

ராணுவ ஆட்சி நடைபெறும் மியான்மருக்கு ரூ. 350 கோடியும், தாலிபான்கள் ஆட்சி செய்யும் ஆப்கனிஸ்தானுக்கு ரூ. 100 கோடியும் நிதியுதவிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.
பூடானுக்கு அதிகம், மங்கோலியாவுக்குக் குறைவு: நட்பு நாடுகளுக்கு பட்ஜெட்டில் எவ்வளவு ஒதுக்கீடு?
ANI
1 min read

நட்பு நாடுகளில் அதிகபட்சமாக பூடானுக்கு, குறைந்தபட்சமாக மங்கோலியாவுக்கு மத்திய பட்ஜெட்டில் நிதியுதவி அறிவிக்கப்பட்டுள்ளது.

2025-2026-ம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டை மக்களவையில் இன்று (பிப்.01) தாக்கல் செய்தார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். இதில், இந்தியாவின் அண்டை மற்றும் நட்பு நாடுகளுக்காக அறிவிக்கப்பட்டுள்ள நிதியுதவிகள் தொடர்பான விவரங்கள் வெளியாகியுள்ளன.

அதிகபட்சமாக, இந்தியாவிற்கு மிக நெருக்கமான நட்பு நாடான பூடானுக்கு ரூ. 2150 கோடி நிதியுதவி அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பூகோள ரீதியில் இந்தியாவிற்கு நெருக்கமான மற்றொரு அண்டை நட்பு நாடான நேபாளத்தில் ரூ. 700 கோடி அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மாலத்தீவுக்கு மத்திய பட்ஜெட்டில் ரூ. 600 கோடி அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்தாண்டில் ரூ. 470 கோடி நிதியுதவி மட்டுமே அந்நாட்டிற்கு வழங்கப்பட்டது. அதேநேரம், 2024 தேர்தலுக்கு முன்பு தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால பட்ஜெட்டில் மாலத்தீவிற்கு ரூ. 600 கோடி நிதியுதவி அறிவிக்கப்பட்டது.

தேர்தல் வெற்றிக்குப் பிறகு தாக்கல் செய்யப்பட்ட முழு மத்திய பட்ஜெட்டில் மாலத்தீவிற்கு ரூ. 400 கோடி நிதியுதவி அறிவிக்கப்பட்டு பிறகு ரூ. 470 கோடியாக அது உயர்த்தப்பட்டது. மாலத்தீவைத் தொடர்ந்து மொரீசியஸ் நாட்டிற்கு ரூ. 500 கோடியும், இலங்கைக்கு ரூ. 300 கோடியும், வங்கதேசத்திற்கு ரூ. 120 கோடியும் நடப்பு மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளன.

அதேநேரம், ராணுவ ஆட்சி நடைபெறும் மியான்மருக்கு ரூ. 350 கோடியும், தாலிபான்கள் ஆட்சி செய்யும் ஆப்கனிஸ்தானுக்கு ரூ. 100 கோடியும் அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும் ஒட்டுமொத்தமாக ஆஃப்ரிக்க நாடுகளுக்கு ரூ. 225 கோடியும், மங்கோலியாவுக்கு ரூ. 5 கோடியும் அறிவிக்கப்பட்டுள்ளன.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in