
தில்லி உயர்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் கட்டுக்கட்டாகப் பணம் கண்டெடுக்கப்பட்ட காணொளியை உச்ச நீதிமன்றம் வெளியிட்டுள்ளது.
தில்லி உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தை அணைக்கச் சென்ற தீயணைப்பு வீரர்கள், அவரது வீட்டில் கட்டுக்கட்டாக பணத்தைக் கண்டெடுத்ததாகத் தகவல் வெளியானது.
தற்போது பிரயாக்ராஜ் என்று அழைக்கப்படும் அலஹாபாதில் 1969 ஜனவரி 6-ல் பிறந்தவர் யஷ்வந்த் வர்மா. கடந்த 2014-ல் அலஹாபாத் உயர் நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்ட யஷ்வந்த் வர்மா, 2016 முதல் அதே உயர் நீதிமன்றத்தில் நிரந்தர நீதிபதியாகப் பணியாற்றினார். கடந்த 2021-ல் தில்லி உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.
இந்த விவகாரம் தொடர்பாக 3 நீதிபதிகள் அடங்கிய விசாரணைக் குழுவை உச்ச நீதிமன்றம் அமைத்தது. மார்ச் 20, 2025 அன்று கொலீஜியம் கூட்டத்திற்கு முன்பு தனது விசாரணையைத் தொடங்கிய தில்லி உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி, மார்ச் 21 அன்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் தனது அறிக்கையைச் சமர்ப்பித்தது.
இந்நிலையில் யஷ்வந்த் வர்மா வீட்டில் கட்டுக்கட்டாகப் பணம் கண்டெடுக்கப்பட்ட வீடியோ ஆதாரத்தை உச்ச நீதிமன்றம் வெளியிட்டுள்ளது.