நடிகர் தர்ஷன் வேறு சிறைக்கு மாற்றம்: 7 அதிகாரிகள் இடைநீக்கம்!

பெங்களூரு சிறையில் நடிகர் தர்ஷனுக்கு சொகுசு வசதிகள் அளிக்கப்பட்டதாகக் கூறி..
தர்ஷன்
தர்ஷன்ANI
1 min read

பெங்களூரு சிறையில் நடிகர் தர்ஷனுக்கு சொகுசு வசதிகள் அளிக்கப்பட்டதாகக் கூறி 7 சிறை அதிகாரிகள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்த ரேணுகா சுவாமி என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில், நடிகர் தர்ஷன், நடிகை பவித்ரா கௌடா உட்பட 17 பேர் கைது செய்யப்பட்டனர்.

பெங்களூரு பரப்பன அக்ரஹார மத்திய சிறையில் தர்ஷன் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அவர் சிறை வளாகத்திற்குள் காபி மற்றும் சிகரெட்டுடன் அமர்ந்திருக்கும் படமும், வீடியோ கால் பேசுவது போன்ற படமும் வெளியாகி பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதைத் தொடர்ந்து பெங்களூரு சிறையில் நடிகர் தர்ஷனுக்கு சொகுசு வசதிகள் அளிக்கப்பட்டதாகக் கூறி 7 சிறை அதிகாரிகள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், நடிகர் தர்ஷனை வேறு சிறைக்கு மாற்ற கர்நாடக முதல்வர் சித்தராமையா உத்தரவிட்டுள்ளார்.

logo
Kizhakku News
kizhakkunews.in