திரிவேணி சங்கம நீர் புனித நீராடலுக்கு உகந்தது: எதிர்க்கட்சிகளை சாடிய யோகி ஆதித்யநாத்!

சனாதன தர்மம் அல்லது மஹா கும்பமேளா அல்லது கங்கை அன்னை குறித்து ஆதாரமில்லாமல் அவதூறு பரப்பினால் அது 56 கோடி மக்களை அவமதிப்பதற்கு சமமாகும்.
திரிவேணி சங்கம நீர் புனித நீராடலுக்கு உகந்தது: எதிர்க்கட்சிகளை சாடிய யோகி ஆதித்யநாத்!
ANI
1 min read

பிரயாக்ராஜ் திரிவேணி சங்கம நீர் புனித நீராடலுக்கு உகந்தது என்றும், மஹா கும்பமேளாவிற்கு களங்கம் விளைவிக்கும் வகையில் அறிக்கையை முன்வைத்து எதிர்க்கட்சிகள் செயல்படுவதாகவும் குற்றம்சாட்டியுள்ளார் உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்.

உ.பி.யின் பிரயாக்ராஜ் மாவட்டத்தில் கங்கை நதியும், யமுனை நதியும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் பகுதியில் கும்பமேளா நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பிரயாக்ராஜில் பாயும் கங்கை, யமுனை நதிகளில் கழிவு நீர் கலப்பதைத் தடுக்கக்கோரி தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டது.

கடந்த பிப்.17-ல் நடைபெற்ற இந்த வழக்கு விசாரணையின்போது, பசுமைத் தீர்ப்பாயத்தில் மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தாக்கல் செய்த அறிக்கையில், பிரயாக்ராஜின் திரிவேணி சங்கமம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நீரில் நிர்ணயிக்கப்பட்டதைவிட அளவுக்கு அதிகமாக ஃபீக்கல் கோலிஃபார்ம் பாக்டீரியா இருப்பதாகவும், இதனால் அந்த பகுதிகள் குளிப்பதற்கு தகுதியற்றவையாக மாறிவிட்டதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக உ.பி. சட்டப்பேரவையில் இன்று (பிப்.19) பேசிய அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், பிரயாக்ராஜ் திரிவேணி சங்கம நீர் புனித நீராடுவதற்கும், குடிப்பதற்கும் உகந்தது என்றும், மஹா கும்பமேளாவிற்கு களங்கம் விளைவிக்கும் வகையில் மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரித்தின் அறிக்கையை முன்வைத்து எதிர்க்கட்சிகள் போலியாகப் பிரச்சாரம் செய்வதாகவும் குற்றம்சாட்டினார்.

மேலும், `இதுவரை 56.25 கோடி மக்கள் பிரயாக்ராஜில் புனித நீராடியுள்ளார்கள், சனாதன தர்மம் அல்லது மஹா கும்பமேளா அல்லது கங்கை அன்னை ஆகியவை குறித்து ஆதாரமில்லாமல் அவதூறு பரப்பினால் அது அந்த 56 கோடி மக்களை அவமதிப்பதற்கு சமமாகும்’ என்றார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in