ரூ. 30 கோடி சம்பாதித்த படகோட்டி: கும்பமேளா விமர்சனத்திற்கு யோகி ஆதித்யநாத் பதிலடி!

மஹா கும்பமேளாவுக்காக ரூ. 7,500 கோடி முதலீடு செய்து, ரூ. 3 லட்சம் கோடி வருவாய் ஈட்டப்பட்டது.
ரூ. 30 கோடி சம்பாதித்த படகோட்டி: கும்பமேளா விமர்சனத்திற்கு யோகி ஆதித்யநாத் பதிலடி!
ANI
1 min read

பிரயாக்ராஜ் மஹா கும்பமேளாவின்போது படகோட்டிகள் சுரண்டப்பட்டதாக எதிர்க்கட்சி முன்வைத்த குற்றச்சாட்டிற்கு, ஒரு படகோட்டி குடும்பம் கும்பமேளாவில் ரூ. 30 கோடி சம்பாதித்தாக தகவலளித்தார் உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்.

உ.பி. மாநிலம் பிரயாக்ராஜில் ஜனவரி 13-ல் தொடங்கிய மஹா கும்பமேளா கடந்த பிப்.26-ல் நிறைவுபெற்றது. இதை முன்வைத்து உத்தரப் பிரதேச சட்டப்பேரவையில் இன்று (மார்ச் 5) நடைபெற்ற விவாதத்தின்போது, மஹா கும்பமேளாவில் படகோட்டிகள் சுரண்டப்பட்டதாக குற்றம்சாட்டினார் சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த ஒரு எம்.எல்.ஏ.

இதற்கு பதிலளித்த முதல்வர் யோகி ஆதித்யநாத், `ஒரு படகோட்டி குடும்பத்தின் வெற்றிக் கதையைப் பற்றி நான் உங்களிடம் கூறப்போகிறேன். அவர்கள் வசம் 130 படகுகள் இருந்தன. (மஹா கும்பமேளா நடைபெற்ற) 45 நாட்களில் அவர்களுக்கு ரூ. 30 கோடி லாபம் கிடைத்தது. அப்படியென்றால் ஒவ்வொரு படகும் ரூ. 23 லட்சம் சம்பாதித்தன. ஒவ்வொரு நாளும், ரூ. 50 ஆயிரம் முதல் ரூ. 52 ஆயிரம் வரை ஒரு படகு வருமானம் ஈட்டியுள்ளது’ என்றார்.

மேலும், மஹா கும்பமேளாவுக்காக ரூ. 7,500 கோடி முதலீடு செய்து, ரூ. 3 லட்சம் கோடி வருவாய் ஈட்டியதாக சட்டப்பேரவையில் தகவல் தெரிவித்துள்ளார் முதல்வர் யோகி. அது தொடர்பாக அவர் கூறியதாவது,

`ஹோட்டல் துறைக்கு ரூ. 40,000 கோடியும், உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் துறைக்கு ரூ. 33,000 கோடியும், போக்குவரத்து மூலம் ரூ. 1.5 லட்சம் கோடியும், மத சடங்குகள் சார்ந்து ரூ. 20,000 கோடியும், நன்கொடையாக ரூ. 660 கோடியும், சுங்கச் சாவடிகள் மூலமாக ரூ. 300 கோடியும், பிற வருமானங்கள் மூலம் ரூ. 66,000 கோடியும் மஹா கும்பமேளாவின்போது வருமானமாகக் கிடைத்துள்ளது’ என்றார்.

மேலும், மஹா கும்பமேளாவால் உருவாக்கப்பட்ட உள்கட்டமைப்பு வசதிகள் பல தசாப்தங்களுக்கு பிரயாக்ராஜ் நகருக்குப் பலன் அளிக்கும் என்றும் குறிப்பிட்டார் முதல்வர் யோகி.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in